முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயர்லாந்துக்கு எதிராக இந்தியா திணறல் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

பெங்களூரு, மார்ச் - 7 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கத்துக்குட்டி அணியான அயர்லாந்துக்கு எதிராக இந்தியா திணறல் வெற்றியைப் பெற்றது.  10 வது உலக கோப்பையின் பி பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, டெஸ்ட் அந்தஸ்து பெறாத அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இதே மைதானத்தில் கடந்த லீக் போட்டியில் இங்கிலாந்தை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த அயர்லாந்து அணி இன்று இந்திய அணியை என்ன செய்ய காத்திருக்கிறதோ என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த இந்த போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.
துவக்க ஆட்டக்காரர்களாக அயர்லாந்து அணியின் கேப்டன் வில்லியம் போர்ட்டர் பீல்டு மற்றும் ஸ்டிர்லிங் களமிறங்கினர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர்கான் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின்  4வது பந்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஸ்டிர்லிங் கிளீன்போல்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை ஒரு ரன். இதையடுத்து ஜோய்ஸ் களமிறங்கினார். இவரும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜாஹீர்கானின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஓபிரைன், கேப்டனுடன் ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை நிதானமாக உயர்த்தினார். குறிப்பாக போர்ட்டர்பீல்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் எண்ணிக்கை 122 க்கு உயர்ந்தபோது நன்கு விளையாடிக்கொண்டிருந்த ஓபிரைன் 46 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ஒயிட்டும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 129 க்கு உயர்ந்தபோது பந்துவீச வந்த யுவராஜ்சிங், 5 ரன்கள் எடுத்திருந்த  ஒயிட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். கேட்ச் பிடித்து அவுட்டாக்கியவர் தோனி. அடுத்து கடந்த லீக் போட்டியில் அதிரடியாக சதமடித்து இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ வைத்த கெவின் ஓபிரைன் களமிறங்கினார். ஆனால் இவரது விக்கெட்டை யுவராஜ்சிங் தானே பந்துவீசி தானே பிடித்து காலி செய்தார். ஓபிரைன் எடுத்த ரன்கள் 9 மட்டுமே. அப்போது அணியின் எண்ணிக்கை 33.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களாக இருந்தது. அடுத்து குசாக், போர்ட்டர்பீல்டுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்நிலையில் நல்ல முறையில் விளையாடிக்கொண்டிருந்த போர்ட்டர்பீல்டு 75 ரன்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங்கின் பந்துவீச்சில் ஹர்பஜன் சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 160. அடுத்து வந்த மூனேயும், யுவராஜ்சிங்கின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்க அயர்லாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து குசாக்குடன் ஜோடி சேர்ந்தார் ஜான்ஸ்டன்.  ஆனால் குசாக்கும் 24 ரன்களை எடுத்திருந்தபோது யுவராஜ்சிங்கின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட் இழப்பிற்கு 184. அடுத்து வந்த டோக்ரெல் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜாஹீர்கானின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 201. ஜோன்ஸ்டன்  17 ரன்களை எடுத்திருந்தபோது முனாப் பட்டேலின் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். இதனால் அயர்லாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை எடுத்தது. ரான்கின் ஆட்டமிழக்காமல் ஒரு ரன்னை எடுத்திருந்தார். இந்திய தரப்பில் யுவராஜ்சிங் அபாரமாக பந்துவீசி 31 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜாஹீர்கான் 2 விக்கெட்டுகளையும், முனாப்பட்டேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சாளர் ப்யூஸ் சாவ்லா இந்த போட்டியிலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
208 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிய இலக்கை இந்திய அணி சேஸ் செய்தது. துவக்க வீரர்கள் சேவாக் மற்றும் டெண்டுல்கர் களமிறங்கினர்.
அதிர்ச்சியளிக்கும் விதமாக சேவாக் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஜான்ஸ்டனின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அணியின் எண்ணிக்கை அப்போது 9. அடுத்து டென்டுல்கருடன், காம்பீர் ஜோடி சேர்ந்தார். இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வெறும் 10 ரன்களை எடுத்திருந்தபோது காம்பீர் ஜான்ஸ்டனின் பந்தில் குசாக்கால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அணியின் எண்ணிக்கை 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 24. அடுத்து இளம் வீரர் ஹோக்ளி களமிறங்கினார். இவரும்  டென்டுல்கரும் அணியின் எண்ணிக்கையை சிறிது சிறிதாக உயர்த்தினர். அணியின் எண்ணிக்கை 87 க்கு உயர்ந்தபோது டென்டுல்கர் 56 பந்துகளில் 38 ரன்களை எடுத்த நிலையில் டோக்ரெலின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து யுவராஜ் களமிறங்கினார். இந்நிலையில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. அப்போது சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஹோக்ளி 34 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து அணித் தலைவர் மகேந்திரசிங்தோனி, யுவராஜுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப் ஓரளவு சிறப்பானதாக இருந்தது. அணியின் மொத்த ஸ்கோர் 167 ஐ அடைந்தபோது தோனி 34 ரன்களில் டோக்ரெல் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் யூசுப்பதான் களமிறங்கினார். இவரும் யுவராஜ் சிங்கும் வெற்றிக்கு தேவையான ரன்களை கடைசியில் அதிரடியாக சேர்த்தனர். யுவராஜ் சிங் 75 பந்துகளில் அரைசதம் கடந்தார். யூசுப்பதான் 24 பந்துகளில் 30 ரன்களை அடித்தார்.  இதனால் இந்திய அணி 46 ஓவர்களில் 210 ரன்களை அடித்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை  வென்றது. அயர்லாந்து தரப்பில் ஜான்ஸ்ட்டன் 2 விக்கெட்டுகளையும், டோக்ரெல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக யுவராஜ்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  
இந்திய அணி 3 போட்டிகளின் முடிவில் 2 வெற்றி மற்றும் ஒரு போட்டி சமனில் முடிந்ததால்   5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago