முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசாந்த் பூசன் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.14 - பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் பிரபல வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் பிரசாந்த் பூசன். இவர் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் குழுவில் இடம்பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் காஷ்மீருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள பிரசாந்த் பூசனின் சேம்பருக்குள் 2 இளைஞர்கள் திடீரென உள்ளே நுழைந்து அவரை தாறுமாறாக தாக்கி அடித்து உதைத்தனர். அப்போது பிரசாந்த் பூசன் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். இதனால் அவர் தாக்கப்பட்ட சம்பவம் தத்ரூபமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரசாந்த் பூசன் தாக்கப்பட்டதும், அங்கு ஓடிவந்த வக்கீல்களும் ஆதரவாளர்களும் தாக்கியவர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பியோடிய இன்னொரு நபரை போலீசார் தேடிவந்த நிலையில் அவரும் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் ஒரு ஸ்ரீராம் சேனா இயக்கத்தைச் சேர்ந்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  

காஷ்மீருக்கு எதிரான கருத்துக்களை பிரசாந்த் பூசன் தெரிவித்து இருந்ததால் அவரை ஸ்ரீராம் சேனா இயக்கத்தைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரசாந்த் பூசன் தாக்கப்பட்டபோது சேம்பருக்கு வெளியே 3வது நபர் ஒருவர் காத்திருந்தார் என்று கூறப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட இந்த 3 பேரில் ஒருவரது பெயர் இந்தர் வர்மா. இவர் ஸ்ரீராம் சேனா இயக்கத்தின் டெல்லி தலைவர் என்று போலீசார் கூறினர். கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!