முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்கு எதிரான நம்பிக்கையை ஏற்படுத்தவே ரதயாத்திரை

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

 

வாரணாசி, அக்.14 - என்னை முன்னிலைப்படுத்தியோ அல்லது பா.ஜ.க.வை முன்னிலைப் படுத்தியோ நான் யாத்திரை செல்லவில்லை. மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான நம்பிக்கையை ஏற்படுத்தவே நான் இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளேன் என்று எல்.கே.அத்வானி கூறியுள்ளார். ஊழலுக்கு எதிரான ஜன் சேத்ரா யாத்திரையை துவக்கியுள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நேற்று மூன்றாவது நாளாக தனது யாத்திரையை மேற்கொண்டார். வாரணாசியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அத்வானி பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாட்டில் மலிந்துள்ள ஊழல்களால் மக்கள் மத்தியில் ஒரு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த அவ நம்பிக்கையை போக்கும் வகையில் ஊழலுக்கு எதிரான நம்பிக்கையை வளர்க்கும் வகையிலேயே தான் இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மற்றபடி தன்னை முன்னிலைப்படுத்தவோ, பாரதிய ஜனதா கட்சியை முன்னிலைப் படுத்துவதற்காகவோ தான் இந்த யாத்திரையை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 

என்னை முன்னிலைப் படுத்துவதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறதா என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் ஊழலுக்கு எதிரான நம்பிக்கையை ஏற்படுத்தவே நான் இந்த யாத்திரையை மேற்கொள்கிறேன் என்று நான் மக்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார். ஊழல்கள் பிரச்சனையில் மத்திய அரசு எதையும் செய்யவில்லை. மத்திய கணக்கு தணிக்கை குழு மூலம் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரும்போதெல்லாம் மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். 

2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்திய முரளி மனோகர் ஜோஷியை நான் மிகவும் பாராட்டுகிறேன். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீண்டும் இந்தியாவுக்கே கொண்டுவர வேண்டும் என்பதே எனது குறிக்கோள். இந்த கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவந்தால் அதன் மூலம் கிராமங்களுக்கு மின்வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை செய்து கொடுக்கலாம் என்றும் அவர் கூறினார். 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாடு நம்பிக்கையை இழந்துவிட்டது. ஊழல் விஷயத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. நாட்டில் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த கறுப்புப் பணமே. அந்த கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்தால் விலைவாசி உயர்வை தடுக்கலாம். ஏழை மக்களுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றலாம் என்றும் அவர் கூறினார். 

இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்களான கல்ராஜ்மிஸ்ரா, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் சூரியபிரதாப் சஹி ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சின்போது கல்ராஜ் மிஸ்ராவின் ஜன் ஸ்வதிமான் யாத்திரையையும் அத்வானி துவக்கிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago