முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்றத்தை இன்று புறக்கணிக்க வக்கீல்கள் சங்கம் முடிவு

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.14 - வக்கீல் சதீஷ் கொலை விவகாரம் தொடர்பாக இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கப்போவதாக வக்கீல் சங்கம் முடிவு செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சங்கரசுப்புவின் மகன் வக்கீல் சதீஷ்குமார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணையில் மெத்தனத்தை கடைபிடித்து, காலதாமதம் செய்கிறது என வக்கீல்கள் சங்கம் குற்றம் சாட்டியது. இதையடுத்து, சி.பி.ஐ. விசாரணையின் மெத்தன போக்கை கண்டித்து இன்று, சென்னை ஐகோர்ட் பணிகளை புறக்கணிப்பதாக வக்கீல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் கூறியதாவது:

சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் சி.பி.ஐ. விசாரணை சரிவர நடக்கவில்லை. வேண்டுமென்றே விசாரணையை திசை திருப்பிவிட்டு காலதாமதம் செய்கின்றனர். 

எனவே, இந்த கொலை வழங்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும். இதை வலியுறுத்தி நாளை(இன்று) நீதிமன்ற புறக்கணிப்பு நடத்த சங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறு மோகனகிருஷ்ணன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்