முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் உள்ளாட்சி தேர்தல் ஆய்வுக்கூட்டம்

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,அக்.14 - மதுரை மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் -மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் சகாயம் கூறுகையில்,  தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ளன. இந்த 3 நாட்களும் மிக முக்கியமான நாட்கள். எனவே மதுரை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். பறக்கும் படையினருடன் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சியளிக்கவேண்டும் வாக்குப்பதிவு அன்றும் வாக்கு எண்ணிக்கையின் போதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கவேண்டும்.

 மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மாற்றத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வந்து வாக்களிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். வாக்குப்பதிவில் ஈடுபடுத்தப்படவுள்ள அலுவலர்களுக்கு  வாக்குப்பதிவில் ஈடுபடுவதற்கான ஆணைகள் வழங்கப்படவேண்டும். ஆனால் வாக்குப்பதிவு நாள் அன்று காலையில் தான் அவர்கள் எந்த வாக்குச்சாவடியில் பணியாற்றப்போகிறார்கள் என்ற விபரத்தை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும். உள்ளாட்சி நல்லாட்சியாக அமைய மனசாட்சியோடு அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சகாயம் கூறினார்.

 இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேஷ், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை பிரபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலி அக்பத், இணைஇயக்குநர் மற்றும் முதல்வர் (மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனம் டி.கல்லுப்பட்டி) செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வரலட்சுமி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago