முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்பது தீவிரம்

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

கெய்ரோ,மார்ச்.8 - உள்நாட்டு போர் உக்கிரம் அடைந்துள்ள லிபியா நாட்டில் இருந்து எகிப்து வழியாக இந்தியர்களை மீட்க கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகம் எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. லிபியாவில் அடுத்தடுத்து நிலைமை மிக மோசமடைந்து வருகிறது. இதனால் லிபியாவில் இருந்து வெளியேறும் இந்தியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஸ்காடியா பிரின்ஸ் எந்ற பெரிய கப்பல் பயன்படுத்தப்படுகிறது. 

லிபியாவின் பெங்காசி நகரில் இருந்து 1,188 இந்தியர்கள் எதிப்தின் மிக பெரிய துறைமுகமான அலெக்சாண்டிரியாவுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 5 தனி விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். எகிப்துக்கும், லிபியாவுக்கும் இடையில் எல்லைப்புறத்தில் உள்ள ஷலோம் என்ற இடத்தில் 467 இந்தியர்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டன. லிபியா கலவரத்தில் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை தொலைத்தவர்களுக்கு தற்காலிகமாக அடையாள அட்டையும், பயணம் செய்வதற்கான அத்தாட்சி கடிதங்களும் தரப்படுகின்றன. இவர்கள் அனைவரும் மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். கடந்த வாரத்தில் மட்டும் இவ்விதமாக 3 ஆயிரம் இந்தியர்கள் லிபியாவில் இருந்து மட்டும் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்