முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஆயிரம் விளக்கில் அ.தி.மு.க. பிரமுகருக்கு வெட்டு

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.18 -​சென்னை ஆயிரம் விளக்கில் பூத்சிலிப் விநியோகித்த அ.தி.மு.க. பெண் பிரமுகரை விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிய தி.மு.க. வினரை போலீசார் வலை விசி தேடிவருகின்றனர். இது குறித்த விபரம் வருமாறு: சென்னை ஆயிரம் விளக்கு மங்கீஸ்கார்டன் பகுதியை சேர்ந்தவர் கற்பகம். இவர் 111​வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பெண் பிரமுகர் குட்டியம்மாள் என்ற சரஸ்வதி (42) என்பவர் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். நேற்று காலை குட்டியம்மாள் வாக்களித்து விட்டு, ஓட்டுச்சாவடி அருகே அமர்ந்து nullத் சிலிப் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அ.தி.மு.க.வினரை விரட்டினார்கள். ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையம் அருகே 4 பேர் அவரை வழி மறித்து வாக்குவாதம் செய்தனர். திடீரென அவர்கள் குட்டியை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு ஓடிவிட்டனர். 

குட்டியம்மாளின் தலை, கைகளில் கத்தி குத்து விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவரை உடனே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. பெண் பிரமுகர் குட்டியம்மாள் கத்தியால் குத்தப்பட்ட தகவல் அறிந்ததும் அங்கு அ.தி.மு.க.வினர் திரண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் சேவுசாயி, உதவிக்கமிஷனர் சரவணன் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். 

அப்போது, குட்டியம்மாளை கத்தியால் குத்தியது தி.மு.க.வை சேர்ந்த கென்னடி, ஜான்பிஸ்வால், ஸ்டாலின் மேத்யூ என்று தெரிய வந்தது. அவர்கள் மூவரும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!