முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி தேர்தலில் 62 சதவீதம் வாக்கு பதிவு

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.18 - மதுரை மாநகராட்சி தேர்தலில் 62 சதவீதம் வாக்கு பதிவானது. தமிழகம் முழுவதும் நேற்று 10 மாநகராட்சி உள்பட நகராட்சி, ஊராட்சிகளுக்கு நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு  நடந்தது. மதுரை மேயர் மற்றும் வார்டுகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. காலையில் வாக்கு பதிவு மந்தமாகவே இருந்தது. காலை 11 மணிக்கு 21 சதவீதம் வாக்குகளே பதிவாகி இருந்தது. 12 மணிக்கு மேல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. பகல் 1.30 மணிக்கு 52 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. மாலை 5 மணிக்கு ஓட்டு பதிவு முடிவடைந்தது. இறுதி நிலவரப்படி 62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஓட்டு பதிவு முடிவடைந்ததும் ஓட்டு பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் ஏஜெண்டுகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பெட்டிகளில் வைக்கப்பட்டது.

  சீல் வைக்கப்பட்ட ஓட்டு பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மருத்துவ கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. ஓட்டு பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற 21 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!