முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு எண்ணிக்கைக்கு ஊறுவிளைவிப்பது குற்றம்

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 19 - வாக்கு எண்ணிக்கை ஊறு விளைவிப்பது குற்றமாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வவும் 21 ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, 

வாக்கு எண்ணும் இடத்தில் வேட்பாளரும், அவரது முகவரும் இருக்கலாம். ஒரு மேஜைக்கு ஒரு முகவர் என்ற வீதத்தில் முகவர்களை நியமித்துக் கொள்ளலாம். இதற்கென உள்ள படிவத்தை பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலரின் முன் ஒப்புதல் பெற வேண்டும். அந்த படிவத்தில் முகவருடைய போட்டோ ஒட்டப்பட்டிருக்க வேண்டும். வேட்பாளரோ, முகவரோ வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்குள் மையங்களுக்கு வர வேண்டும். 

வாக்கு பெட்டிகள், வாக்குப் பதிவு எந்திரங்கள் சேதாரமோ மாற்றங்களோ இல்லாமல் இருக்கின்றனவா என்று பரிசோதிக்க வேண்டும். மேலும் வாக்கு பெட்டியும், வாக்குப் பதிவு எந்திரங்களும் மூடி சீல் வைக்கப்பட்ட பின்னர் திறக்கப்பட்டதற்கான தடயங்கள் ஏதுமின்றி உள்ளனவா என்பதையும் பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையும் உரிய முறையில் நடைபெறுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் அமைதியாகவும் விதிகளின்படியும் நடந்து கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு ஊறு விளைவிப்பது குற்றமாகும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!