முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 2-கட்ட தேர்தல்: கலெக்டர் ஆலோசனை

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.19 - மதுரையில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து மதுரை கலெக்டர் சகாயம் மற்றும் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இது குறித்து மாவட்ட கலெக்டர் சகாயம் கூறுகையில்,  மதுரை மாவட்ட த்தில் முதற்கட்டத் தேர்தல் மிக அமைதியாக நடத்தியதற்கு அதில் பணியாற்றிய பணியாளர்களுக்கு முதலில் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். முக்கியமாக தகவல் தொடர்பு பணியில் சிறப்பாக தெரிவித்த செயற்பொறியாளர் வெண்ணிலா, மற்றும் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெரியசாமி என்பவர் இரவு நேரங்களில் வாகனத்தில் தங்கியே பணியாற்றியது பாராட்டுக்குரியது.

இராண்டாம் கட்டமாக இன்று செல்லம்பட்டி, கள்ளிக்குடி, சேடப்பட்டி, தே.கல்லுப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகள், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய நகராட்சி பகுதிகள், எழுமலை பேரையூர், சோழவந்தான், தே.கல்லுப்பட்டி, வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சிப்பகுதிகளில் நடைபெறுவுள்ள தேர்தல்களில் முதற்கட்டமாக  நடைபெற்றதை போல அமைதியாக தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கு எடுக்கப்பட்டுள்ளது. 

வாக்குச்சாவடிகளுக்கு போதுமான வாக்குப்பெட்டிகள் அனுப்பபடவேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் வாக்குச்சீட்டுகள் சரியாக அனுப்ப தயாராக உள்ளனா என சரிபார்க்க வேண்டும். இரு வார்டு வாக்குச்சாவடிகளாக இருப்பின் இரு வார்டு உறுப்பினர்களுக்குமான வாக்குச்சீட்டுகளை சின்னங்களின் படி அடையாளம் கண்டுதனித்தனியே சரியான எண்ணிக்கையில் வாக்குச்சீட்டுகள் அனுப்பப்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். 

தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுக்கு உறுதுணையாக கூடுதலாக உள்பார்வையாளர் அவருக்கு 4 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அந்தந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும் குறிப்பாக வாக்களார்கள் அதிகமுள்ள மையங்களை கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.  கீரிப்பட்டியில் துணை கலெக்டர் அளவில் 50 அலுவலர்களுக்கு மேல் முகாமிட்டு கண்காணித்து  வருகிறார்கள். அதேபோல் நாட்டார்மங்கலம், பாப்பார்பட்டி ஆகிய ஊராட்சிகளில் கூடுதல் வட்டாட்சியர்கள் அதிகளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.  இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க தேவையான காவல்துறை அலுவலர்களும், முன்னாள் இராணுவப்படைவீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்று மாவட்ட கலெக்டர் சகாயம் கூறினார். 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேஷ், இணை இயக்குனர் (வேளாண்மை) சங்கரலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெய்சிங்ஞானதுரை, மாவட்ட வழங்கல அலுவலர் சுரேந்தர், செய்தி மக்கள் தொடர் அலுவலர் செல்வராஜ் உட்பட தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!