முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மேற்குத் தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலின்போது பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 13ம் தேதி திருச்சி மேற்குத்தொகுதியில், இடைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்சோதி, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் உள்பட 16 பேர் போட்டியிட்டனர்.

பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் பணியில் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு வாக்கு எண்ணும் உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் ஆகிய 3 பேர் கொண்ட குழு ஈடுபடவுள்ளது.

ஒவ்வொரு மேஜையிலும் நடைபெறும் வாக்குப்பதிவு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. மொத்தம் 18 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் காலை 6 மணிக்கு சாரநாதன் பொறியியல் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். வாக்கும் எண்ணும் இடத்திற்கு செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலாவதாக தமிழக போலீஸார், 2-வது ஆயுதப் படை போலீஸார், 3-வது மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர் என்றார் ஆட்சியர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்