முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்கீல்கள் போராட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு உதை

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.20 - வக்கீல்கள் போராட்டத்தை எதிர்த்து பொது நலன் வழக்கு தொடர்ந்த விவசாயி சென்னை ஐ கோர்ட்டில் நேற்று வக்கீல்கலால் தாக்கப்பட்டார். அவருக்கு பாதுகாப்பாக வந்த எஸ்.ஐ. விரட்டிஅடிக்கப்பட்டார் இந்த சம்பவம் பற்றிகூறப் படுவதாவது. கோவை மாவட்டம் துடியலூர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சென்ற வக்கீல் ஆனத்தீஸ்வரன் என்பவர் போலீசாரால் தாக்கப்பட்டார். வக்கீலை தாக்கிய எஸ்.ஐ ரேணுகா தேவி உட்பட பலரை கைது செய்யக் கோரி கோவை வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் கோவையை சேர்ந்த விவசாயி கந்தசாமி வயது (65) பொது நல மனுதாக்கல் செய்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

நான் நில அபகரிப்பு புகார் கொடுக்க கோவை எஸ்.பி அலுவலகத்திற்கு அக்டோபர் -10 ந் தேதி சென்றேன். அந்த இடத்தில் வக்கீல் மற்றும் சட்டகல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்ததால் என்னை புகார் கொடுக்க உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த போராட்டத்தால், பொது மக்கள் வாழ்க்கை பாதிக்கபடுகிறது. எனவே போராட்டக்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர். டி.ஜி.பி ஆகியோருக்கு உத்திரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை தலைமை நீதிபதிகள் எம்.ஒய். இக்பால் நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை பென்சு முன்பு வந்தது.

அப்பொழுது கந்தசாமி ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து நீதிபதிகள். இந்த மனுவில் எதிர் மனுதாரர்ராக தமிழ்நாடு மற்றும் புதுவை பார்கவுன்சில் தலைவரை சேர்க்க வேண்டும். என்றும் மனு மீதான விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்தும் உத்தரவிட்டார்.

விவசாயி கந்தசாமி கோர்ட்டில் ஆஜராகிய போது அவருக்கு உதவியாக மப்டியில் இருந்த எஸ்.ஐ செயல்பட்டார். இதை கவனித்த வக்கீல்கள் சிலர். கோர்ட் அறையில் இருந்த அந்த எஸ்.ஐ யை வெளியே வருமாறு கூறினர். வெளியே வந்த எஸ்.ஐ யை ஒரு வக்கீல் கோர்ட்டில் இருந்து விரட்டி அடித்தார். அங்கு பாதுகாப்பு நின்றிருந்த போலீஸ்சார் அந்த எஸ்.ஐ யை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். மனுதாரர் விவசாயி கந்தசாமியையும் வக்கீல்கள் தாக்கினார். இதனால் சென்னை ஐ கோர்ட் முதன்மை பெஞ்சில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்