முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூக்கடையிலிருந்து பட்டாசு கடைகள் தீவுதிடலுக்கு மாற்றம்

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.20 - சென்னை ஐ கோர்ட்டு உத்தரவுபடி பாரிமுனை மற்றும் பூக்கடை பகுதியிலிருந்த பட்டாசு கடைகள் தீவு திடலுக்கு மாற்றப்படுகின்றன. சென்னை பாரிமுனை nullக்கடை பகுதியில் பல ஆண்டுகளாக தீபாவளி பட்டாசு கடைகள் தற்காலிகமாக அமைக்கப் பட்டு விற்பனை செய்யப்பட்டன. இந்த தற்காலிக பட்டாசு கடைகளை பாரிமுனை பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி தீவுத்திடல் பகுதியில் அமைக்க வேண்டும் என்று பல வருடமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. சென்னை பாரிமுனையில் பட்டாசு கடைகளை நடத்த அனுமதி கோரியதை, ஐகோர்ட் நிராகரித்து, தீவுத்திடலில் கடைகளுக்கு இடம் ஒதுக்கவும், உரிமம் வழங்கவும் உத்தரவிட்டது.

பட்டாசு கடைகள் வைப்பதற்கு தீவுத்திடலில் இடம் ஒதுக்கீடு செய்து, கடைகளை ஆய்வு செய்து, தற்காலிக உரிமம் வழங்க வேண்டும் என, போலீஸ் கமிஷனருக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்நடவடிக்கைகளை, 18-ம் தேதிக்குள் (நேற்று முன்தினம்) முடிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் தாக்கல் செய்த அப்பீல் மனுவில், பாரிமுனை பகுதியில் பட்டாசு விற்பனை செய்கிறோம். 

கடைசி நேரத்தில், தீவுத்திடலில் இடம் ஒதுக்கி, கடைகளை கட்டி, ஆய்வு செய்து, உரிமம் பெறுவது கடினம். எனவே, பழைய இடத்திலேயே கடைகளை நடத்தவும், அதற்கு என்.ஒ.சி., வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது. 

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: 

தீவுத்திடலில் கடைகள் அமைக்க இடம் காலை 11 மணிக்கு முன், விண்ணப்பங்களை உறுப்பினர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

அவர்களுக்கு, நேற்று (19-ந்தேதி) மாலை 6 மணிக்குள், இடம் ஒதுக்க வேண்டும். அதன்பின், கடைகளை உறுப்பினர்கள் அமைத்துக் கொள்ளலாம்.

கடைகள் கட்டிய பின், அதை ஆய்வு செய்து, என்.ஓ.சி., வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர் ஆய்வு செய்து, 24 மணி நேரத்தில் என்.ஓ.சி., வேண்டும்.

இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

இதில் இந்த ஆண்டு பட்டாசு கடைகளை தீவுத் திடலில் தான் நடத்த வேண்டும் என்றும் பாரிமுனை பகுதியில் தற்காலிக கடை நடத்த அனுமதிக்க கூடாது என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தற்காலிக கடை வைக்க விரும்புபவர்கள், அதிகாரிகளிடம் மனு செய்து தீவுத் திடலில் இடத்தை தேர்வு செய்து கடை வைத்து கொள்ளலாம் என்றும் கோர்ட்டு கூறி உள்ளது.  கடந்த ஆண்டு 59 தற்காலிக பட்டாசு கடைகளை nullக்கடை பகுதியில் செயல்பட போலீசார் அனுமதித்தனர். இந்த ஆண்டு இவைகளை தீவுத்திடலில்தான் நடத்த வேண்டும் என்று கண்டிப்புடன் போலீசார் கூறி விட்டனர். இதனால் தற்காலிகமாக கடை நடத்த விரும்பும் பட்டாசு வியாபாரிகள் தீவுத் திடலில் அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்து வருகின்றனர். இதன் மீது நேற்று (19-ந்தேதி)மாலை போலீசார் முடிவெடுத்து கடைகளை ஒதுக்க உள்ளனர். பாரிமுனை nullக்கடை பகுதியில் பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு, மலையபெருமாள் தெருக்களில் நிரந்தர பட்டாசு கடைகள் 10 உள்ளன. இவை செயல்பட எந்த தடையும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர். இதையடுத்து சுமார் 59 கடைகள் சென்னை தீவுதிடலுக்கு மாற்ற வியாபாரிகள் மின்னல் வேகத்தில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த கடைமாற்றும் போராட்டம் நீண்ட நாட்களாக நடைபெற்று தற்போது தான் ஒருமுடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்