விமான என்ஜின் பாகங்களை காணவில்லை: ஏர்-இந்தியா

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அக். 20 - டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான என்ஜின் பாகங்கள் திருடப்பட்டுள்ளன. இது குறித்து ஏர் இந்தியா புகார் செய்துள்ளது. சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட ரூ. 10 லட்சம் மதிப்புள்ள போயிங் விமான என்ஜின்களின் உதிரிபாகங்கள் பராமரிப்பு மைய கிட்டங்கியில் இருந்து திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டு கடந்த ஜூன் மாதத்திலேயே நடந்திருந்தாலும் அதை இப்போதுதான் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா ஊழியர்களின் உதவி இல்லாமல் இந்த திருட்டு நடக்க சாத்தியமில்லை என்று போலீசார் கருதுகின்றனர். கிணற்றை காணவில்லை என நடிகர் வடிவேலு புகார் தருவது மாதிரி விமானத்தையே காணவில்லை என்று ஏர்இந்தியா புகார் தந்தாலும் ஆச்சரியமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: