Idhayam Matrimony

வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க முடியாது

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.20 - உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று தி.மு.க. , பா.ம.க. , சி.பி.எம். கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது இது குறித்த விவரம் வருமாறு. சென்னை மாநகராட்சி தேர்தலை எதிர்த்து தி.மு.க. , பா.ம.க. , கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியவை சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன அதில் தி.மு.க. மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியம்  உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவின் போது வன்முறை சம்பவம் நடந்த 18 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த கோரியும், தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 239 வாக்கு சாவடிகள் மறு வாக்கு பதிவு நடத்த கோரியும். மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி சென்னை மாநகராட்சிக்கு ஓட்டு மொத்தமாக மறு தேர்தல் நடத்தவும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த கோரியும் மனு தாக்கல் செய்தார். மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் டி.கே.சண்முகம் 4 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வக்கீல் பூங்குன்றன் என்பவர் சென்னை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை 18 மையங்களில் நடைபெறுகின்றன. இந்த மையங்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். பிற மாநில தேர்தல் பார்வையாளர்களை ஈடுபடுத்தவும் மற்றும் மத்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் முருகேசன் மற்றும் நீதிபதி - சசிதரன் ஆகியோர் பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தலை நடத்தவது குறித்து அக்டோபர் 14-ம் தேதி ஐ கோர்ட் சில நிபந்தனைகளுடன் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர். அதே போல் தேர்தலின் போது ஓட்டுசாவடிகள் கைபற்றுதல், கள்ள ஓட்டு போடுதல் ஆகியவைகள் குறித்து தேர்தல் கமிஷனருக்கு மனு தாரர்கள் மனு கொடுத்தனர். இந்த மனுக்களின் அடிப்படையில் தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

ஆனால் இந்த மனு மட்டுமே தேர்தலுக்கு இடைகால தடை விதிக்க போதுமானதாக இல்லை மனுதாரர்களிடம் வேறு ஆதார ஆவணங்கள் எதுவும் இல்லை அதை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் இல்லை மனுதாரர்கள் கூறிய குற்றசாட்டுகளை எல்லாம் வழக்கின் முடிவில் தான் விசாரிக்க முடியும்.

இடைகால உத்தரவாக பின்வரும் - நிபந்தனைகளை விதிக்கிறோம்.

1) ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மறு தேர்தலை மாநில தேர்தல் கமிஷன் நடத்தலாம்.

2) மேலும் தேர்தல் ஓட்டு எண்ணுவது, முடிவினை அறிவிப்பது வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது ஆகிய பணிகளை திட்டமிட்டு அறிவிக்கப்பட்டபடி தேர்தல் கமிஷன் மேற்கொள்ளலாம்.

3) அதே நேரம் ஓட்டு எண்ணும் பணி முடிவு அறிவிப்பு சான்றிதழ் வழங்குதல் போன்ற எல்லா பணிகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.

4) வெற்றி பெற்ற கவுன்சிலர் மேயர் அகியோருக்கு சான்றிதழ் வழங்கும் போது, இந்த வெற்றி என்பது ஐ கோர்ட் தொடரபட்ட வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுபட்டது என்பதை தேர்தல் கமிஷன் குறிப்பிட வேண்டும்.

5) தேர்தல் வெற்றிச் சான்றிதலை பெற்ற கவுன்சிலர் மேயர் ஆகியோர் இந்த வெற்றியை உரிமையாக பிற்காலத்தில் கூற முடியாது.

இந்த வழக்கை வரும் நவம்பர் 9-ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் பதில் மனுகளை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்