முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிமாநில தேர்தல் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்த மறுப்பு

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.21 - வாக்கும் எண்ணும் பணியின் போது வெளி மாநிலத்தைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் வெளிமாநில போலிசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தி.மு.க. வினரின் கோரிக்கையை சென்னை ஐ கோர்ட் நிராகரித்துவிட்டது. இது குறித்த விபரம் வருமாறு. சென்னை மாநகராட்சி தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர் வேட்பாளர்கள் மற்றும் பிற பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக அவர்கள் ஐ கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவின் போது அனைத்து வாக்கு சாவடிகளிலும் வீடியோ படம் எடுக்க வேண்டும், பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகளில் வெப்கேமிரா பொருத்தப்பட வேண்டும், சென்னை தவிர பிற இடங்களில் பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகளில் கட்டாயமாக வீடியோ படம் எடுக்க வேண்டும், இங்கு பிற மாநில போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும், தேவைப்பட்டால் மத்திய போலீஸ் படையை அழைத்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை சென்னையில் தேர்தல் ஆணையம் செயல்படுத்தவில்லை. 

இதனால் வாக்கு பதிவின்போது பல்வேறு தேர்தல் முறைகேடுகள் நடந்தது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களில் நடைபெறும் என அஞ்சிகிறோம். ஆகையால் வாக்கு எண்ணும் மையங்களில் வெளிமாநில போலீஸ்சாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுத்தோம். இந்த மனுமீது தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறபிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த  வழக்கு நீதிபதி டி.முருகேசன் மற்றும் நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் சார்பில் நடைப்பெற்ற வக்கீல்கள் வாதத்தினை அடுத்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏ.ஜி.நவநீதகிருஷ்ணன் ஆஜராகி வாக்கு எண்ணும் இடங்களில் போதிய அளவிற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணுவதை ஆரம்பம் முதல் இறுதிவரை வீடியோ படம் எடுக்கபடவுள்ளது என்று தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இது தொடர்பான அனைத்து மனுக்களையும் பைசல் செய்து உத்தரவிட்டார். அதேசமயமம் வாக்கு எண்ணும் மையங்களில் தகுந்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். வாக்கு எண்ணும்போது வாக்கு முடிவுகள் அறிவிக்கும் வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

மேலும், வாக்கு எண்ணும் போது பின்பற்றக்கூடிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணும் மையங்களில் பிற மாநில தேர்தல் பார்வையாளர்களையும், பிறமாநில காவல் துறையினரையும் ஓட்டு எண்ணும் போது பணியில்  அமர்த்த வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கைகளை நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.  இந்த உத்தரவு சென்னை மாநகர் மட்டும் மின்றி மநில முழுவதும் பொருந்தும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்