முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணை கொலை கோரும் மனு தள்ளுபடி: சுப்ரீம்கோர்ட்டு

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.8 ​- கருணை கொலைக்கு அனுமதி கோரும் மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. கருணை கொலைக்கு அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்றும் கூறியுள்ளது.  மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அருணா ராமசந்திர ஷன்பக் என்ற நர்ஸ் பணி புரிந்து வந்தார். அப்போது இவருக்கு வயது 23. பணியில் இருக்கும்போது அதே மருத்துவமனையில் வார்டு பாய்யாக பணிபுரிந்து வந்த ஒருவர், அருணாவை வலுக்கட்டாயமாக கற்பழித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருணா மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் இந்த சம்பவம் நடந்து 37 ஆண்டுகளாகியும் அருணாவுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவே இல்லை. அருணா இன்னும் படுத்த படுக்கையாகவே இருக்கிறார். அதனால் அவரை கருணா கொலை செய்ய அனுமதிக்கும்படி சுப்ரீம்கோர்ட்டில் அருணா சார்பாக எழுத்தாளர் பிங்கி விரானி என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். விசாரணையின்போது அருணா கோமா நிலையில் இருந்தாலும் நாங்கள் சொல்வதை புரிந்து கொள்கிறார். உணவு சாப்பிடுகிறார். அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்கக்கூடாது என்று அந்த ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் நர்ஸ்கள் சாட்சியம் அளித்தனர். மேலும் கருணை கொலைக்கு மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்தது.  இந்த மனுவை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ச், ஜியான் சுதா மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. விசாரணை முடிவில் இன்று (நேற்று) தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் அருணா சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தனர். ஒருவரை கருணை கொலை செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும் அதனால் அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்