முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கும்

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.21 - தமிழ்நாட்டில் இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென்மேற்கு பருவமழைக் காலம் தான் இந்தியாவிற்கு அதிக மழையை வருவிக்கிறது. இந்த காலம் பெரும்பாலும் ஜூன் மாதம் முதல் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருந்தாலும் அதன் தாக்கம் அக்டோபர் மாதம் மத்தி வரை நீடிக்கும். இந்த காலம் முழுமையாக முடிந்த பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும். 

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே29ம் தேதி துவங்கியது. செப்டம்பர் வரை தீவிரமாக பெய்தது. அதன் பிறகு அதன் தாக்கம் குறைந்ததால் வெப்பம் அதிகரித்தது.  இதன் காரணமாக கோடைமழை பெய்தது. தென்மேற்கு பருவக்காற்று அதிகாரத்தில் இருக்கும் போது மேகத்தின் பயணம் மேற்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழையின் ஆதிக்கமும் அக்டோபர் முதல் வாரத்தில் முடிந்தது. அதற்கு பிறகு  கோடை மழை பெய்தது. இப்போது இந்த பருவமழை முழுமையாக முடிவுக்கு வந்து விட்டது. இதையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உருவாகியுள்ளது. அதில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் வங்கக்கடலில் வடக்கு எல்லையில் கடந்த 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இது வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்வதால் வங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்கின்றது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை முழுமையான பிறகு வடகிழக்கு பருவக்காற்று வீசக்கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago