முக்கிய செய்திகள்

நடிகை குஷ்பு 2-வது நாளாக ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆஜர்

Image Unavailable

ஆண்டிபட்டி அக்-21 - நீதிபதிகள் விடுமுறை எதிரொலி நடிகை குஷ்பு இரண்டாவது நாளாக ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆஜரானார். நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த போது தேர்தல் கமிசன் அறிவித்த விதிமுறைகளை மீறி அதிகமான வாகனங்களுடன் சென்று போக்குவரத்திற்கு இடையூறாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் தேனி பகுதிகளில் அதிகமான வாகனங்களுடன் வந்து தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்து பிரச்சாரம் செய்தார். இதனால் ஆண்டிபட்டி மற்றும் பழனிசெட்டியபட்டி காவல் நிலையங்கள் இந்திய சட்டம் 143, 341, 171, 188 கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 26.03.2011 பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளுக்காக பலமுறை சம்மன் அனுப்பியும் கோர்ட்டில் குஷ்பு ஆஜராகவில்லை. இந்நிலையில் தனக்கு சீமானைப் போல் பிடிவாரண்ட் பிறப்பித்து விடுவார்களோ என பயந்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நடிகை குஷ்பு முன்ஜாமீன் மனு சமர்ப்பித்தார். இந்த மனுவின் மீது விசாரணை மேந்கொண்ட நீதிபதிகள் சம்மந்தப்பட்ட ஆண்டிபட்டி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி பினையில் செல்லலாம் என அறிவுறுத்தினர். அதன்படி நேற்று முன்தினம் நடிகை குஷ்பு தனது வக்கில்களுடன் ஆண்டிபட்டி கோர்ட்டுக்கு வந்தார். ஆனால் நீதிபதி சுந்தரராஜன் விடுப்பில் சென்றதால் அவருக்கு பெயில் கிடைக்கவில்லை. மீண்டும் அவர் பொறுப்பு நீதிபதி பெரியகுளம் நடுவர் நீதிமன்றத்திற்கு சென்றார். அங்கும் நீதிபதி சங்கர் விடுப்பில் சென்றதால் வாடிய முகத்துடன் முன் ஜாமீன் கிடைக்காமல் திரும்பிச் சென்றார். மீண்டும் நேற்று 2வது நாளாக ஆண்டிபட்டி கோர்ட்டில் காலை 10.30 மணிக்கு ஆஜரானார். ஆண்டிபட்டி கோர்ட் வளாகத்தில் 4 மணி நேரம் அமர்ந்திருந்த நடிகை குஷ்புவிற்கு நீதிபதி சுந்தரராஜன் டிசம்பர் 12-ம் தேதி வாய்தா வழங்கியும் வழக்கு முடியும் வரை ஒவ்வொரு வாய்தாவிற்கும் நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்திரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: