முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணி இல்லாததால் ஓட்டு குறைந்ததா?

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, அக்.21 - முன்னாள் முதல்வரும், புதுவை சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த தேர்தலை விட இந்திரா நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஏகேடி ஆறுமுகம் 3 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இது 75 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில் கடந்த தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் 20 ஆயிரம் வாக்குகள் பெற்றார். அது தற்போது 15 ஆயிரம் வாக்குகளாக குறைந்துள்ளது. 

மேலும் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வெற்றி 8 ஆயிரமாக பாதியாக குறைந்துள்ளது. இது ஆளும் கட்சிக்கு கிடைத்த மரண அடியாகும். ஏனெனில் இந்த இடைத்தேர்தலில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அதிகாரத்தை மு

ழுமையாக பயன்படுத்தி வாக்காளர்களை மிரட்டி, வேலை வாய்ப்பு தருவதாக டோக்கன் வழங்கியும் வாக்கு சதவீதத்தை அவர்களால் உயர்த்த முடியவில்லை. அதனால் தான் இதை மரண அடி என்று கூறுகிறோம். 

மேலும் ரங்கசாமியின் சொந்த தொகுதியில் காங்கிரசின் வாக்கு உயர்ந்திருப்பது எங்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துமானால் அதை சந்திக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். 

அதனால் இந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துமா? என்றும் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதைதொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி: 

ஆளும் கட்சிக்கு ஓட்டு குறைந்துள்ளது ஏன்?

பதில்: கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரமே காரணம். நிர்வாக திறமை இன்மை. மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை. சட்டம்-ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்டவையே இந்த குறைந்த ஓட்டுக்கு காரணம். மக்கள் வீட்டை விட்டு வெளியே சென்று நிம்மதியாக திரும்ப முடியுமா? என்ற பயத்தில் உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏதோ அலை வீசியதால் ஆட்சிக்கு வந்ததாக கூறினார்கள். ஆனால் அந்த அலை அ.தி.மு.க. கூட்டணி ஏற்படுத்திய அலை. தமிழகத்தில் ஏற்பட்ட அந்த அலை புதுவையில் வீசியது. இப்போது அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்பதால் அந்த அலை இல்லை. 

அதோடு எங்களால் வளர்க்கப்பட்ட பலர் இடம் மாறியதால் கிடைத்த வெற்றி. சபாபதி போன்ற வர்கள் சொந்த செல்வாக்கு வைத்திருப்பதால் கிடைத்த வெற்றியாகும். 

முதல்வருக்கு அவரது தொகுதியிலேயே செல்வாக்கு சரிந்துள்ளது. அந்த தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். கேள்வி: முதல்வர் ரங்கசாமிக்கு இதன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: நான் சொல்வதை விட மக்கள் அவருக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர். மக்களை பாதுகாக்க முடியாதவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்பதை இந்த தேர்தலில் தெரிவித்து இருக்கிறார்கள். இதனை முதல்வர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா?

பதில்: இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்க எந்த அதிகாரமும் இல்லை. இதனை கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்