முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 18 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.20 - சென்னை மாநகராட்சியில் கடந்த 17-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 18 மையங்களில் 35 அறைகளில் வாக்குகள் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறினார். 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர், கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் சிக்கமத், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் வே.மு.கிறிசோ நாயகம், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி,  கர்நாடக மாநில தேர்தல் ஆணைய அலுவலர் ஆஷா ஆகியோர் இன்று (நேற்று 20.10.2011) சென்னை லயோலா கல்லூரியில் சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்திற்கு சென்று சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு தனியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தினை பார்வையிட்டு பாதுகாப்பு பணிகள், வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வெப் காஸ்டிங் செய்யப்படும் பணிகளை உறுதி செய்தார். 

மேலும், வேட்பாளர்களின் முகவர்கள் தங்கும் ஓய்வு அறைகளையும், பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் அளிக்கும் ஊடக மையத்தினையும், வாக்கு முடிவினை தொகுத்து, இணைய தளம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

அப்பொழுது, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் சோ. அய்யர், ஊடக பிரதிநிதிகளுக்கு பேட்டி அளித்த போது, வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடத்திட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல ஆணைய வலைதளத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், சென்னை மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை சென்னையில் 18  மையத்தில் 35 அறைகளில் எண்ணப்படுகிறது என்றும் ஒவ்வொரு அறைக்கும், வாக்கு எண்ணிக்கை பணிகளை கண்காணித்திட ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் என கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் வாக்கு எண்ணிக்கை பணிகளை ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொருவர் இருந்து கண்காணிப்பார் எனவும் தெரிவித்தார்.

சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் வருமாறு:-

1. வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர். (1 முதல் 14​வது வார்டு வரை ஓட்டுகள் எண்ணப்படுகிறது) 2. செயின்ட் செபாஸ்டின் இன்டஸ்டிரியல் பயிற்சி கல்லூரி, மாதவரம் (15 முதல் 21​வது வார்டு வரையிலான ஓட்டுகள்) 3. வேலம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி, சென்னை (22 முதல் 33​வது வார்டு வரை) 4. தியாகராய கல்லூரி, பழைய வண்ணாரப்பேட்டை (34 முதல் 37 மற்றும் 46​வது வார்டு) 5. சென்னை மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை (38 முதல் 41 வரை மற்றும் 42 முதல் 45 வரை, 47, 48 வார்டுகள்) 6. பாரதி கலைக்கல்லூரி, பிரகாசம் சாலை (49 முதல் 57 வரை, 59 வார்டுகள்) பச்சையப்பன் கல்லூரி 7. ராணிமேரி கல்லூரி காமராஜர் சாலை (58, 60 முதல் 83 வரை 115 முதல் 120​ வது வார்டு வரை) 8. பி.பி. செங்கல்வராயன் பாலிடெக்னிக், வேப்பேரி (வார்டு 64 முதல் 68 வரை 69 முதல் 73 வரை) 9. லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம் (வார்டு 74 முதல் 78 வரை, 109 முதல் 114 வரை) 10. டி.ஏ.வி. சீனியர் செகன்டரி ஆண்கள் பள்ளி, முகப்பேர் (வார்டு 79 முதல் 86 வரை 87 முதல் 93 வரை) 11. பச்சையப்பன் கல்லூரி ஈ.வெ.ரா. பெரியார் சாலை (வார்டு 94 முதல் 98 வரை 99 முதல் 103 வரை 104 முதல் 108 வரை) 12. பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி (வார்டு 121​ முதல் 126 வரை 176 முதல் 182 வரை) 13. மீனாட்சி பொறியியல் கல்லூரி விருகம்பாக்கம் (வார்டு 127 முதல் 129 வரை 130 முதல் 135 வரை 137, 138) 14. சென்ட்ரல் பாலிடெக்னிக், அடையாறு (வார்டு 136, 139 முதல் 142 வரை, 170 முதல் 175 வரை) 15 .ராஜராஜேஸ்வரி பொறியியல் கல்லூரி, அடையாளம்பட்டு (வார்டு 143 முதல் 149 வரை, 150 முதல் 155 வரை) 16. மோன்ட்போர்ட் பயிற்சி இன்ஸ்டிடிட், கண்டோன் மெண்ட் அலுவலகசாலை (வார்டு 156 முதல் 159 வரை, 168, 169, 160 முதல் 167 வரை) 17. ஆசான் மெமோரியல் கல்லூரி, பள்ளிக்கரணை (வார்டு 183 முதல் 186 வரை 187 முதல் 191 வரை) 18. டி.பி. ஜெயின் கல்லூரி துரைப்பாக்கம் (வார்டு 192 முதல் 195 வரை, 196 முதல் 200 வரை) வாக்கு எண்ணும் இடங்கள் அனைத்திலும் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டு பெட்டிகள் எடுத்து வருவது முதல் எண்ணிக்கை முடிக்கும் வரை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் அனைத்து வாக்கு எண்ணும் இடங்களையும் கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று முடிந்ததும் அறிவிப்பு வெளியிடப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்