முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் நகர் மன்ற தலைவராக அ.தி.மு.க. சரவணன் தேர்வு

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மேலூர், அக். 22 - மேலூர் நகராட்சிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பெற்ற வாக்குகள் 11,569 ஆகும். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் முகமது யாசின் பெற்ற வாக்குகள் 8,274 ஆகும். இவரையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அங்குமுத்து 409 வாக்குகளையும், தே.மு.தி.க. ராஜாராம் 387 வாக்குகளையும் பெற்றனர். மேலூரில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் அ.தி.மு.க. 21 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், தி.மு.க. 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 

3 வது வார்டில் காங்கிரசும், 4, 9, 10, 17, 23 ஆகிய வார்டுகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற 21 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றோர் விபரம்:

1 வது வார்டு ராஜேந்திரன்

2 வது வார்டு சந்திரன்

5 வது வார்டு மெகராஜ்பீவி

6 வது வார்டு பரமசிவம்

7 வது வார்டு பார்வதி

8 வது வார்டு நாச்சம்மாள்

11 வது வார்டு ராஜேஷ்

12 வது வார்டு உமாதேவி

13 வது வார்டு வித்யசாந்தி

14 வது வார்டு சரவணகுமார்

15 வது வார்டு ராஜீநாகசுப்பிரமணியம்

16 வது வார்டு அன்புக்கரசு

18 வது வார்டு கேபிள் டி.வி. ஐயப்பன் 

19 வது வார்டு பெரியதுரை

20 வது வார்டு மரகதம்

21 வது வார்டு கண்ணன்

22 வது வார்டு சபீனாபானு

24 வது வார்டு பாண்டிதுரை

25 வது வார்டு செல்வி

26 வது வார்டு பாலகிருஷ்ணன்

27 வது வார்டு சோனைமுத்து ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க.விடம் இருந்த மேலூர் நகராட்சியை இப்போது தற்போது அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சாமி எம்.எல்.ஏவிடம் கேட்ட போது, 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களுக்காக அயராது பாடுபடுவதற்கு சான்றாக இந்த வெற்றி அமைந்துள்ளது என்றார். நகர் மன்ற தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற சரவணன் கூறும் போது, வெற்றி பெற்ற இந்த சமயத்தில் எனக்கு வாய்ப்பளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி முதல்வரின் மீது வைத்திருந்த நம்பிக்கையாலும், எம்.எல்.ஏ. சாமியின் உழைப்பாலும் கிடைத்த வெற்றி என்றார். இந்த வெற்றிக்கு பொதுமக்களுக்கு நன்றி கூறுகிறேன் என்றார். மேலும் இந்த வெற்றியை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குவதாகவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்