முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மாநகராட்சி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கோவை, அக்.22 - தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 17 மற்றும் 19ஆம் தேதிகளில் நடந்தது. கோவை மாநகராட்சியில் 10,45,674 வாக்காளர்கள் உள்ளனர்.  கோவை மாநகராட்சிக்கு மேயர் மற்றும் 100 வார்டுகளுக்காக ஓட்டு பதிவு கடந்த 17 தேதி நடந்தது. இதில் 6,23,574 வாக்குகள் பதிவானது. ஓட்டுகளை எண்ணும் பணி நேற்று காலை துவக்கியது. அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் செ.ம.வேலுச்சாமி முதல் சுற்று முதலே முன்னிலை வகித்தார். ஒவ்வொரு சுற்று முடிவின் போதும் தி.மு.க. வேட்பாளர் கார்த்திக்கை விட 1000க்கும் மேலான ஓட்டுகளை அதிகம் பெற்றார். ஓட்டு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் 2,81,574 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் 1,53,816 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதில் 1,27,912 ஓட்டுகள் அதிகம் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் செ.ம.வேலுச்சாமி வெற்றி பெற்றார். கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்காக ஓட்டு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பலர் வார்டுகளில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முன்னணியில் இருந்தனர். கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் இறுதியாக 78 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. 10, சுயேட்சை 4, காங்கிரஸ் 3, பி.ஜே.பி. 2, சி.பி.எம்.1, தே.மு.தி.க. 1, ம.தி.மு.க. 1, இடங்களை கைப்பற்றியுள்ளது.

மேயர் பதவிக்கு வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் செ.ம.வேலுச்சாமி கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்கு நித்தமும் சிந்தித்து நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த ஆட்சியில் 1 லட்சம் கோடி கடனை தி.மு.க. அரசு விட்டு சென்றது அதனையும் சமாளித்து நல்லாட்சி புரிந்து வருகிறார் தமிழக முதல்வர். கோவை மாநகராட்சிக்கு குடிநீர், ரோடு, சாக்கடை வசதிகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். கோவை தொழில் நகரம் என்பதால் மாநகரத்திற்க்காக தேவைகளை உடனடியாக தமிழக முதல்வரிடம் பேசி அதற்கான நிதியை பெற்று செயல் படுத்துவேன். கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளால் அ.தி.மு.க. வெற்றி பெற்றது என்ற எண்ணத்தை பொது மக்கள் இந்த தேர்தல் மூலம் பொய்யாக்கி உள்ளனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago