முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகர் மன்ற தேர்தல்: அ.தி.மு.க. வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், அக். 22 - திருமங்கலம் நகர் மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் உமா விஜயன் 2834 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் உட்பட 4 பேர் டெபாசிட் இழந்தனர். திருமங்கலம் நகர் மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று பி.கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் முகமது சிராஜ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் அ.தி.மு.க. வேட்பாளர் உமா விஜயன் கடைசி சுற்று வரை தொடர்ந்து முன்னிலை பெற்று வந்து வெற்றி பெற்றார். இவரை அடுத்து வந்த தி.மு.க. வேட்பாளர் முருகனை 2,834 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து உமா விஜயன் அமோக வெற்றி பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 11,475 ஆகும். முருகன்(தி.மு.க.) 8641 வாக்குகளும், ஜெயராம்(காங்.) 6009 வாக்குகளும் பெற்றிருந்தனர்.  காங்கிரஸ் வேட்பாளர் ஜெயராமுக்கு 3 வது இடமே கிடைத்தது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் முத்துக்காளை உள்ளிட்ட 4 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். வெற்றி பெற்ற வேட்பாளர் உமா விஜயனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அத்தாட்சி சான்றிதழை வழங்கியதையடுத்து ஊர்வலமாக வந்த உமா விஜயன் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வந்து மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான முத்துராமலிங்கத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்