முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல் முடிவு: அரசுக்கு மீண்டும் அங்கீகாரம்

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சாத்தூர், அக்.22 - உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முதல்வர் ஜெயலலிதா அரசுக்கு மக்களின் அங்கீகாரம் பெரும் அளவில் உள்ளது என்பதையே  மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் மூலம் தமிழகம் அ.தி.மு.க. வின் கோட்டை என்பதை மீண்டும் தமிழக மக்கள் நிரூபித்துள்ளனர். அதனால்தான் உள்ளாட்சி அமைப்புகளிலும் அ.தி.மு.க. வினர் அமோகமாக வெற்றி பெற்றுள்ளனர். 

முதல்வரின் தூய்மையான அரசு நிர்வாகத்திற்கும், வழங்கிய மக்கள் நலத்திட்டங்களுக்கும் தமிழக மக்கள் ஆதரவு தந்து அ.தி.மு.க. வை உள்ளாட்சியில் நல்லாட்சி தருவதற்கு வெற்றிபெறச்செய்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளதாவது:-

25 ஆண்டுகளுக்கு பிறகு சாத்தூர் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெரிய அளவில் சாதனை படைத்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் மீண்டும் அ.தி.மு.க. வின் கோட்டை என மக்கள் நிரூபித்துள்ளார்கள். சாத்தூர் தொகுதியில் முதல்வர் கொண்டு வந்த திட்டங்களான அரசு கலைக்கல்லூரி, நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தியது, ஆலங்குளம் சிமிண்ட் ஆலைக்கு 165 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது, 4 புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து வசதியை  துவக்கியது, மாணவர்களுக்கு உதவித்தொகையும், லேப்டாப்பும் வழங்கியது, கிராமமக்களின் பொருளாதாரம் உயர கறவை மாடு, ஆடுகள் வழங்கியது, புதிய தார்ச்சலை வசதி, சாத்தூர் புதிய பேருந்து நிலையம், புதிய அரசு மருத்துவமனை, வைகையாற்றின் குறுக்கே  4.30 கோடி ரூபாயில் தடுப்பணை கட்டி, நீராதாரத்தை பெருக்கியது, மற்றும் பல நலத்திட்டங்களை இத்தொகுதியில் அமல்படுத்தியதால், மக்கள் அ.தி.மு.க. அரசுக்கு அமோக வெற்றி வாய்ப்பை வழங்கியுள்ளனர் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். 

நமது முதல்வர் இந்தியாவுக்கே வழி காட்டும் பிரதமராக செங்கோட்டையில் கொடியேற்றும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும் அமைச்சர்  ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்