முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் நகராட்சி தலைவர்: அதிமுக வேட்பாளர் வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

பெரியகுளம்,அக்.22 - பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓ.ராஜா 7,150 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓ.ராஜா அமோக வெற்றி பெற்றார்.பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகளில் 23,555 வாக்குகள் பதிவாகின.இதில் அதிமுக வேட்பாளர் ஓ.ராஜா 13,654 வாக்குகளும்,திமுக வேட்பாளர் செல்லபாண்டியன் 6509 வாக்குகளும்,இ.கம்யூனிஸ்ட் அப்துல்ரசாக் 1,575 வாக்குகளும்,மதிமுக பாண்டியன் 264 வாக்குகளும்,விடுதலை சிறுத்தை தமிழ்வாணன் 603 வாக்குகளும்,இதர வாக்குகள் சுயேட்சையில் பெற்றுள்ளனர்.இதில் அதிமுக வேட்பாளர் ஓ.ராஜா 7,150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றிக்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் பெற்றுக்கொண்டார்.பின்னர் வாக்குமையத்தில் இருந்து வெளியே வந்த ஓ.ராஜா திறந்த ஜீப்பில் ஊர்வலமாக சென்று வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.பின்பு அண்ணாசிலை,அம்பேத்கார் சிலை,காந்தி சிலை,தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்கினார்.ஊர்வலமாக சென்ற போது வெற்றி பெற்ற பெரியகுளம் நகராட்சி தலைவர் ஓ.ராஜாவிற்கு பொதுமக்களும்,கட்சி தொண்டர்களும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.பெரியகுளம் ஒன்றியத்தில் தாமரைக்குளம்,வடுகபட்டி,தென்கரை,ஆகிய 3 பேரூராட்சிகளை அதிமுக கைப்பற்றியது.பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டு  கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் 24   வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!