முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாநகராட்சி தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

வேலூர்,அக்.22- வேலூர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த 17ந் தேதி நடைபெற்றது. இதில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. அ.தி.மு.க மேயர் வேட்பாளர் கார்த்தியாயினி 1,08,127 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக தி.மு.க.வைச் சேர்ந்த ராஜேஸ்வரி 82,139 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் தேவி, 6,757 வாக்குகளும், மா.கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஜி.லதா 6210 வாக்குகளும், ம.தி.மு.க ஜெ.ஈஸ்வரி, 4910 வாக்குகளும், பா.ம.க வெண்ணிலா 3959 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் அ.தி.மு.க வேட்பாளர் 25,988 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மேலும், வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளைக்கொண்டது தற்போது 25 வார்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அ.தி.மு.க 13 இடங்களிலும், தி.மு.க 6 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும், ம.தி.மு.க 2 இடங்களிலும்,  சுயேட்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இன்னும் 35 இடங்களுக்கு வாக்குள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்