முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. அமோக வெற்றி: மக்களுக்கு சரத்குமார் நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.23 - உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றதற்கு தமிழக மக்களுக்கு ச.ம.க. தலைவர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், அதன் கூட்டணி கட்சிகளின் சார்பிலும், போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை அளித்தமைக்கு தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தப்படி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி அமைந்துள்ள தமிழகத்தில், அவர்கள் செயல்படுத்த நினைக்கும் மக்கள் நலத்திட்டங்கள் யாவும் முழுமையாக மக்களிடம் சென்றடைய இந்த வெற்றி நிச்சயம் முதல்வர் கரங்களை மேலும் வலுப்படுத்தும் என்பது உறுதி. இந்த மாபெரும் வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து தோழமை கட்சி தோழர்களுக்கும், சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!