முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா நெதர்லாந்துடன் இன்று மோதல்

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.- 9 - உலக கோப்பை பி பிரிவில் உள்ள இந்தியா, நெதர்லாந்து அணிகள் டெல்லியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்திய அணி இதுவரை மோதிய 3ஆட்டத்தில் 2ல் வெற்றி பெற்றதது. 1 ஆட்டம் டை ஆனது. மேலும் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கால் இறுதிக்கு செல்ல வாய்ப்பு உறுதியாகிவிடும். இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. சச்சின், யுவராஜ் சிங், காம்பீர் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். முந்னதாக நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் சொதப்பிய சேவாக், கோலி ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யூசுப் பதான் அதிரடியாக விளையாடுவது அணிக்கு வலு சேர்ந்துள்ளது. இருப்பினும் இந்தியஅணியின் பவுலிங் முழுபலம் பெறவில்லை. 

முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தொடர்ந்து படுமோசமாக பந்து வீசி வருகிறார். அவ்வப்போது சுழற்பந்து வீசும் யுவராஜ்சிங் சிறப்பாக பந்துவீசி வருகிறார். ஜாகீர்கான் பந்து வீச்சு மட்டுமே சற்று மிரட்டுவதாக காணப்படுகிறது. முநாப் படேல் விக்கெட்டுகளை வீழ்த்துவதை விட ரன்களை கொடுத்து விடக்கூடாது என்பதில் உன்னிப்பாக செயல்பட்டுவருகிறார். இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக ஆடினால் தான் அடுத்து வரும் போட்டிகளில்  வலிமையான அணிகளுக்கு நெருக்கடி கொடுக்கமுடியும். நமதர்லாந்து அணி இங்கிலாந்து அணிக்கு சற்று தண்ண காட்டினாலும் தோல்வியையே தழுவியது. இருப்பினும் நெதர்லாந்து அணியில் டஸ்சேட் மட்டுமே பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கிறார். பார்சி, பீட்டர் போரன், டாம் ஹூப்பர், ஷூ டிரன்ட் ஆகியோர் சிறப்பாக ஆடினால் தான் ஸ்கோரை எடுக்கமுடியும். இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணி தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேற்றப்படும். 

உலக கோப்பையில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதுவது இது 2 தடவையாகும். 2003ம் ஆண்டில் இந்தியஅணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி சேசிங் செய்து வெற்றிபெற்றது. இதனால் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி உருவாகவில்லை. இதே டெக்னிக்கை இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி கையாளலாம் என தெரிகிறது. டாஸ் வென்றால் பீல்டிங்கை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. டெல்லி ஆடுகளம் பேட்டிங்கிற்கே சாதகமாக உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்