முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுடன் வெற்றி பெற்ற மேயர்கள் நகராட்சி தலைவர் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக். - 25 -  தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 125 நகராட்சிகளில் 89 நகராட்சிகளையும், 529 பேரூராட்சிகளில் 287 பேரூராட்சிகளையும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. மேயர்கள், நகரசபை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் என உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பெரும்பாலான பதவிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு மொத்தம் 9 ஆயிரத்து 864 பதவிகள் கிடைத்துள்ளன. 10 மாநகராட்சிகளிலும் வெற்றி பெற்ற புதிய அ.தி. மு.க. மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள். மேயர்களுக்கு மாநகராட்சி கமிஷனர்களும், நகராட்சிகளுக்கு நகராட்சி கமிஷனர்களும் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்கள். பேரூராட்சி தலைவர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்களும் இன்று பதவி ஏற்கிறார்கள். மொத்தம் வெற்றி பெற்ற 20 ஆயிரத்து 81 ஆயிரம் பேர் இன்று பதவி ஏற்கிறார்கள். இதுபோல் கிராம பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். இன்று பதவி ஏற்க உள்ள சென்னை மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட 10 மேயர்கள் மற்றும் அ.தி.மு.க. நகரசபை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் நேற்று முதல்​அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஆசி பெறுவதற்காக சென்னை வந்தனர். அவர்களுக்கு நேற்று   சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் செ.ம. வேலுசாமி, திருப்nullர் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருப்nullர் ஆ. விசாலாட்சி, மதுரை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.வி. இராஜன் செல்லப்பா, சேலம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ். சவுண்டப்பன், ஈரோடு மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகா பரமசிவம், தூத்துக்குடி மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எல். சசிகலா புஷ்பா, திருநெல்வேலி மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜிலா சத்தியானந்த், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  எம்.எஸ்.ஆர். ஜெயா, வேலூர் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி. கார்த்தியாயிணி  மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் நேற்று போயஸ்கார்டன் சென்று முதல்​அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றனர். அவர்களுக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். துணை தேர்வுகள் மறைமுக தேர்தல் வருகிற 29​ந்தேதி நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே 10 துணை மேயர்கள் மற்றும் பெரும்பாலான நகரசபைகள், பேரூராட்சிகளுக்கும் அந்த கட்சியில் இருந்தே துணை தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்