முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக காங்கிரசுக்கு ஒரு வாரத்தில் புதிய தலைவர் நியமனம்: யுவராஜா

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,அக். - 25 - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு வாரத்தில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் எம். யுவராஜா தெரிவித்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது,  உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவியிடங்களில் வெற்றி பெறாவிட்டாலும், நகராட்சி, பேரூராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்று செல்வாக்கை காங்கிரஸ் நிரூபித்துள்ளது.  காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளின் குரலை அது கண்டுகொள்ளவில்லை. உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் காங்கிரஸ் தோற்றதற்கு மாநில தலைவர் தங்கபாலுதான் பொறுப்பேற்க வேண்டும். அறிவிக்கப்பட்ட வேட்பாளரை கடைசி நேரத்தில் மாற்றியது, காங்கிரஸ் வேட்பாளர் என்பதற்கான படிவம் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகள், முறையான வழிகாட்டுதல் இல்லாதது ஆகியவையே காரணம். 

இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. 

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி முறையாக செலவழிக்கப்படுகிறதா என்பதை இளைஞர் காங்கிரஸ் கண்காணிக்கும். அதில் தவறுகள் நடந்தால் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்