முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்விக்கு நான் மட்டும் காரணம் அல்ல தங்கபாலு பேட்டி

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக். - 25 -  தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு  நேற்று சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:​ தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும்,  அவர்களை ஆதரித்து வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும்  அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில்  கூட்டணி வைத்துக் கொள்ளாமல் தனித்தே போட்டியிட்டது என்ற பெருமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு. கட்சி அடிப்படையில் காங்கிரஸ் 3​வது இடத்தை பிடித்துள்ளது. தேர்தல்  தோல்விக்கு தனிப்பட்ட  முறையில் என்னை குற்றம் சாட்டுவது சரியானது  அல்ல. அனைத்து மேல்மட்ட தலைவர்களும் கலந்து பேசி தான் இந்த தேர்தலில் உரிய நிலைப்பாட்டை எடுத்தோம். சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு நான் தார்மீக பொறுப்பேற்றேன். வேறு எந்த கட்சி தலைவரும் அவர்களது தோல்விக்கு பொறுப்பேற்றது கிடையாது. எனவே உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு அனைவரும் தான் பொறுப்பேற்க வேண்டும். உள்கட்சி விஷயங்களை வெளியில் சொல்வது நல்ல தல்ல. தேர்தல் முடிவு குறித்து ஆய்வு  செய்ய ஒருங்கிணைப்பு  குழு, மாவட்ட  தலைவர்கள் கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. அதில் அவரவர் கருத்துக்களை கூறலாம். இளைஞர்  காங்கிரஸ் தலைவர்  யுவராஜா சொன்னதின் பேரில்தான் சென்னையில் ஒரு வேட்பாளரை கூட மாற்றினோம். அவரால்தான் சத்தியமூர்த்தி பவனில் கலாட்டா ஏற்பட்டது. எனவே தேர்தல் தோல்விக்கு யுவராஜாவும் ஒரு காரணம். பல மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு பி​பார்ம் கொடுக்க வில்லை என்ற புகார்களும் உள்ளன. இதுபற்றியும் விவாதிப்போம். தேர்தல் பிரசாரத்திற்கு காங்கிரஸ்  தலைவர்கள் செல்லாதது  குறித்தும் பேசுவோம். கே.எஸ். இளங்கோவன்  கூறும் கருத்துக்களை பெரிதுப்படுத்த விரும்பவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ்  தனித்தே  போட்டியிட வேண்டும். அப்போதுதான் மக்கள் நம்பிக்கையை பெற முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இவ்வாறு தங்கபாலு கூறினார். பேட்டியின்போது தாமோதரன், உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்