முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.- 25 - டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு:- டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தம் மற்றும் தற்காலிக பணியாளர்கள் சி மற்றும் டி பிரிவுகளை சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் 2010- 11 ஆம் ஆண்டிற்கு 8.33 சதவீத போனசும், 11.67 சதவீத கருணை தொகையும் ஆக மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இந்த ஆணையின்படி ஏறத்தாழ 29 ஆயிரம் டாஸ்மாக் நிறுவன பணியாளர்கள் மொத்தம் 20 கோடியே 92 லட்சம் ரூபாய் போனசாக பெறுவார்கள். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்