முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேயர் ராஜன் செல்லப்பாவுடன் மடீட்சியா நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.- 25 - மதுரை மாநகராட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ராஜன்செல்லப்பாவை மடீட்சியா சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சந்திப்பின் போது மதுரை மாநகர வளர்ச்சி குறித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.  கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மதுரையில் நிரந்தர கண்காட்சி வளாகம் அமைக்கப்பட வேண்டும். பெரிய தொழிற்சாலைகள் அமைக்க கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். வெளிநாட்டு பயணிகள் வருகையை ஊக்குவிக்கவும்/ சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்றப்பட வேண்டும்.  மெட்ரோ இரயில் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். சமயநல்லூர் - உத்தங்குடி இடையே ரிங்ரோடு அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.நகர் பகுதியில் பாதாள சாக்கடை வசதி மேம்படுத்தப்பட வேண்டும். கோரிப்பாளையம், பெரியார் நிலையம், காளவாசல் சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நவீன முறையில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். சுற்றுலா பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் மார்க்கெட் அருகே அடுக்குமாடி தானியங்கி வாகனம் நிறுத்தம் அமைக்கப்பட வேண்டும். வண்டியூர் கண்மாய் மற்றும் மாரியம்மன் தெப்பகுளத்தில் நீர் நிரப்பப்பட்டு அதை மிகச்சிறந்த பொழுது போக்கு ஸ்தலமாக மாற்றப்பட வேண்டும். 

வைகை கரையோரங்கள் நவீனப்படுத்தப்பட்டு பொழுதுபோக்கு பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாநகராட்சி பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு நிகராக நவீனப்படுத்தப்பட வேண்டும். மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தொழில் கல்வி பாடத்திட்டங்களில் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களை சிறந்த தொழிலதிபர்களாக்குவதற்கு தொழில் முனைவோர் ஊக்குவிப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.  இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கு மடீட்சியா தயாராக உள்ளது.  

சர்வதேச தரத்தில் நகரின் சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். மழைகாலத்தில் சாலைகளில் தேங்கும் மழைநீரை அகற்ற நவீனமுறையில் பாதாள சாக்கடைகள் மேம்படுத்தப்பட வேண்டும். விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கும் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சாலைகளுக்கும் உரிய உரிமங்களை அளித்து மதுரையை சிறந்த தொழில் நகரமாக்க வேண்டும். 

மேயர் தமது கோரிக்கையை கணிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago