முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசன்அலி விவகாரத்தில் மத்தியஅரசு மென்மையுடன் நடந்துகொள்கிறது-சுப்ரீம்கோர்ட்

புதன்கிழமை, 9 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.- 9 - கறுப்புப்பணம் முதலை ஹசன் அலி விவகாரத்தில் மத்திய அரசு மென்மை போக்குடன் நடந்து கொள்கிறது என்று சுப்ரீம்கோர்ட்டு மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டில் பெரும் பணக்காரர்களும் கம்பெனி அதிபர்களும் முறைகேடான வழியில் சம்பாத்தியும் செய்த பணத்தை சுவிட்சர்லாந்து, ஜெர்மன், மொரிஷீயஸ், சிசிலி போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இப்படி இந்தியர்கள் வெளிநாடுகளில் சுமார் 70 லட்சம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து கறுப்பு பணத்தை வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி பிரபல வழக்கறிஞரும் முன்னாள் சட்ட அமைச்சருமான ராம் ஜெத்மலானி பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீது விசாரணை நடந்து வருகிறது. 

விசாரணையின்போது வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்புபணத்தை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த வழக்கில் புனே நகரை சேர்ந்த குதிரை பண்ணை அதிபர் ஹசன் அலியும் அவரது மனைவியும் சேர்ந்து இரட்டை வரி விதிப்பில் இருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளில் சுமார் 70 ஆயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த 70 ஆயிரம் கோடிக்கு 50 ஆயிரம் கோடி அளவுக்கு வரி கட்ட வேண்டுமாம். இந்த அளவுக்கு அதிகமான கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் அவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்று மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு ஏற்கனவே கண்டனம் தெரிவித்தது. 

இந்தநிலையில் நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கறுப்புப்பண முதலை ஹசன் அலி விஷயத்தில் மத்திய அரசு மென்மையுடன் நடந்து வருகிறது என்று சுப்ரீம்கோர்ட்டு நேற்று மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களில் அதிக அளவுக்கு ஹசன் அலிதான் பதுக்கி வைத்திருக்கிறார். அப்படிப்பட்டவர் மீது வரி ஏய்ப்பு 2002-ம் ஆண்டு சட்டத்தின்படிதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது மிகவும் மென்மையான போக்கு என்று நீதிபதிகள் பி.சுதர்ஸன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ். நிஜ்ஜாஸ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு சார்பாக ஆஜரான ஜொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை பார்த்து ஹசன் அலி மீது தீவிரவாத தடுப்பு பிரிவு சட்டத்தின்கீழ் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கை மத்திய ரசானது தேசிய பாதுகாப்பு கோணத்தில் புலனாய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆலோசனை கூறினர். 

ஹசன் அலி மீது கூறப்பட்டுள்ள புகார் மீது நடந்து வரும் விசாரணை முன்னேற்றம் குறித்து விரிவான முறையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்ட அமுலாக்க இயக்குனரகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதற்கிடையில் ஹசன் அலி மீது கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்து உள்ளார். எனக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கி கணக்கு இல்லை. நான் ஒரு அப்பாவி. நான் அரசியல் சதிக்கு பலியாகி உள்ளேன் என்று ஹசன் அலி கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்