முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் கோகுலஇந்திரா கேக் வெட்டினார் கொண்டாட்டம்

புதன்கிழமை, 9 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 9 - சர்வதேச மகளிர் தினம் நேற்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அ.திமு.க. மகளிர் அணி செயலாளர் கோகுல இந்திரா தலைமையில் மகளிர் அணியினர் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். ஜெயலலிதாவை மீண்டும் கோட்டையில் முதல்வராக அமர்த்துவோம் என்று வாழ்த்து கோஷமிட்டு சூளுரைத்தார்கள். சர்தவதேச மகளிர் தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்சி தலைவர்கள் பல்வேறு அமைப்புகள் வாழ்த்து செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மகளிர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார். 

பாலின பாகுபாடு என்கிற அடிமைத்தனத்தை தக்த்தெறிந்து விடுதலை மற்றும் அதிகாரமளிக்க்க கூடிய புதிய பாதையில் பெண்கள் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். 

நாம் அனைவரும் ஒரு சேர இணைந்து முன்னேற்றப் பாதையில் அணிவகுத்து செல்வோம் வாருங்கள். அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை பெற நாம் போராடுவோம். நம்மை நாமே வலுப்படுத்திக்கொண்டு அதிகாரத்தில் பங்குபெற நமக்கு நாமே பாடுபட்டு அதன்மூலம் வலுவான இந்தியாவை உருவாக்குவோம் என்று ஜெயலலிதா அந்த வாழ்த்து செய்தியில் கூறியிருந்தார். அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் மகளிர் தினம் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க. தலைமைக்கழக வளாகத்தில் நேற்று காலை அ.தி.மு.க. மகளிர் அணியினர் பச்சை நிற சேலை கட்டி பெருந்திரளான பேர் மகிழ்ச்சியுடன் கூடினார்கள். தலைமைக் கழகம் வந்த பெண்கள் அனைவருக்கும் ரோஜாப்பூ வழங்கி வாழ்த்துக்கள் கூறப்பட்டது.

பின்னர் அங்கு பிரம்மாண்ட கேக் கொண்டு வரப்பட்டது. மகளிர் அணி செயலாளர் கோகுல இந்திரா கேக் வெட்டினார். அப்போது அங்கிருந்தவர்கள் ஜெயலலிதா வாழ்க, வருங்கால் முதல்வர் ஜெயலலிதா வாழ்க என வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். அங்கிருந்த பெண்களுக்கு கோகுல இந்திரா கேக் கொடுத்தார். சாக்லெட், லட்டுகளும் வழங்கப்பட்டன. பெண்கள் உற்சாகத்துடனும, எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தார்கள். ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இன்றைய தினம் ஜெயலலிதாவை மகளிர் சமுதாயம் நன்றியோடு நினைக்கும் பொன்னாள் ஆகும். மகளிர் வாழ்வில் முன்னேற்றம் பெற வேண்டும். வாழ்க்கையில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு செயல்படுத்தியவர் ஜெயலலிதா என்று கோகுல இந்திரா கூறினார்.

மகளிர் காவல் நிலையம் அமைத்தார். மகளிர் கமாண்டோ படை அமைத்தார். முக்கிய அரசு பொறுப்புகளில் உயர் பதவிகளில் துணிந்து பெண்களை நியமித்தார். கிராமப்புறங்களில் சுகாதார வளாகம் கட்டி கொடுத்தார். மகளிர் நீதிமன்றங்கள் அமைத்தார். பெண்களுக்காக தனி பல்கலைக்கழகம் அமைத்தார். ஏழை பெண்கள் பொருளாதார உயர்வு பெற தொழில் முனைவோர் திட்டம் கொண்டு வந்தார். இதுபோன்று எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

எனவே மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும், ஜெயலலிதாவை மீண்டு முதல்வராக கோட்டையில் அமர வைக்க எந்த தியாகத்தையும் செய்ய மகளிர் தயாராக இருக்கிறார்கள். மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்கும் வரை ஓயமாட்டோம் என்று கோகுல இந்திரா கூறினார்.

சர்வதேச மகளிர் தின விழாவில் முன்னாள் எம்.பி. டாக்டர் சரோஜா ஜெனிபர்  சந்திரன், மாவட்ட செயலாளர்கள் சரஸ்வதி ரங்கசாமி, வடசென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்