திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி தேரோட்டம்

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், நவ.2 - திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி திருவிழா தேரோட்டம் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. முருகப்பெருமானின் முதற்படை வீடு என்னும் பெருமை பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியஸ்வாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 26ம் தேதி தீபாவளி தினத்தன்று காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கைகளில் காப்புக்கட்டிக் கொண்டு கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் பூண்டனர்.

திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. காலையில் உற்சவர் சுப்பிரமணிய ஸ்வாமி, தெய்வானை அம்மனுக்கு பல்வேறு திரவிய அபிஷேகங்கள் முடிந்து சர்வஅலங்காரமாகி தங்க மயில் வாகனத்தில் காலை 8மணிக்கு சட்டத் தேரில் எழுந்தருளினர். விரமேற்கொண்ட பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க ரதவீதிகள் மற்றும் கிரிவலம் சென்று தேர் கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டது. 6நாட்கள் விரதமேற்கொண்ட பக்தர்கள் காப்புக்களை கழற்றிவிட்டு விரதத்தை முடித்தனர்.

மாலை 4 மணிக்கு மூலவர் முருகப்பெருமான் முன்பு 108 படி அரிசியில் தயாரான தயிர்ச்சாதம் படைக்கப்பட்டது. அதன்மேல் காய்கறிகள், இளநீர், பழங்கள், அப்பம், வடை, வெற்றிலை பாக்கு வைத்து பாலாடை நெய்வேதன தரிசனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மகா தூப தீபாராதனைகள் நடந்தது.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: