முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவ.28-ல் அமெரிக்க - ஐரோப்பிய யூனியன் மாநாடு

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,நவ.2 - அமெரிக்க-ஐரோப்பா நாடுகளின் யூனியன் மாநாடு வருகின்ற 28-ம் தேதி வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா தலைமையில் நடக்கிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா-ஐரோப்பா நாடுகளிடையே உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஐரோப்பா கவுன்சில் தலைவர் ஹெர்மன் வன் ரோம்பை, ஐரோப்பா கமிஷன் தலைவர் ஜோஸ் மேனுவல் பரோசோ, உயர்நிலை பிரதிநிதி கேத்ரின் அஷ்டோன் ஆகியோர்களுடன் மாநாட்டின்போது சந்தித்து பேச அதிபர் ஒபாமா ஆவலுடன் இருப்பதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜெய் கார்னே விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.  மாநாட்டின்போது உலக பொருளாதாரம்,பொருளாதார வளர்ச்சிக்கு உறவை வலுப்படுத்துதல், ஜனநாயகத்தை நிலைநாட்ட கூட்டப்பணி ஆற்றுவது, ஐரோப்பிய நாடுகளுக்கு அருகில் உள்ள நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா மற்றும் இதர பிராந்தியத்தில் உள்ள நாடுகள் வளர்ச்சிக்கு உதவுவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் விவாதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈரான் விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது, உலக அளவில் தீவிரவாதத்தை ஒடுக்குவது போன்ற விஷயங்களிலும் அமெரிக்காவும் ஐரோப்பா நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படும். அமெரிக்கா-ஐரோப்பா நாடுகளிடையே நல்லுறவு நீடிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா-ஐரோப்பா யூனியன் மாநாடு கடந்தாண்டு நவம்பர் மாதம் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பானில் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்