முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பாட் பிக்சிங்: சல்மான்பட்டுக்கு 7 ஆண்டு சிறை?

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், நவ. 3 - இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது, ஸ்பாட் பிக்சி ங்கில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட்டிற்கு 7 வருட சிறை தண்டனை கிடைக்கும் என்றும், ஆசிப்புக்கு 2 வருட தண்டனை கிடைக்கும் என்றும் தெரிய வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சல்மான்பட், மொகமது ஆசிப் மற்று ம் மொகமது ஆமிர் ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில், ஈடுபட்டதை இங்கிலாந்து பத்திரிகையான தி நியூஸ் ஆப் தி வேர்ல்டு புலனா  ய்வு மூலம் நிரூபித்தது. 

சூதாட்ட தரகர் மஜீத்திடம் இருந்து இவர்கள் லஞ்சம் பணம் வாங்கி கொண்டு ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். சல்மான்பட்  உத்தரவின் பேரில் இருவரும் குறிப்பிட்ட ஓவரில் நோபால் வீசினர். 

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் லார்ட்ஸ் டெ ஸ்டில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட இந்த 2 பேரையும் சர்வதேச போட்டிகளி ல் பங்கேற்க கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்தது. 

சல்மான் பட்டுக்கு 10 ஆண்டும், மொகமது ஆசிப்புக்கு 7 ஆண்டும், மொகமது ஆமிருக்கு 3 ஆண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்த 3 பேர் மீது சதி செய்து ஏமாற்றுதல், லஞ்சப் பணம் பெறுதல் போன்ற பிரிவி ல் லண்டனில் உள்ள செளத் வொர்க் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

மொமது ஆமிர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவரிடம் மட்டும் விசாரணை நடத்தப்படவில்லை. மற்ற இருவரும் குற்றச்சாட்டை மறுத்தனர். இதனால் அவர்களிடம் விசாரணை நடந்தது. 

12 பேர் கொண்ட நடுவர் குழு கடந்த 19 நாட்களாக விசாரணை நடத் தியது. 20 -வது நாளான நேற்று 10 -2 என்ற மெஜாரிட்டி கணக்கில் தீர் ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் சல்மான்பட் மற்றும் மொகமது ஆசிப் இருவரும் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டது. 

சல்மான்பட் மீது இரண்டு பிரிவிலும், மொகமது ஆசிப் மீது ஒரு பிரி விலும் குற்றம் நிரூபிக்கப்பட்டது. ஆசிப் மீதான லஞ்சப் பணம் பெறு தல் குற்றச்சாட்டு குறித்து இன்னும் உறுதியான முடிவுக்கு வரமுடியவி  ல்லை என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இவர்களுக்கான தண்டனை விபரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ள து. சல்மான்பட் மீது இரு பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 7 ஆண்டும், மொகது ஆசிப்புக்கு 2 ஆண்டும் ஜெயில் தண்டனை கிடை க்கும் என்று தெரிகிறது. 

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் ஜெயிலுக்கு செல்லும் சம் பவம் முதன் முறையானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்