முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி ஜாமீன் மனு மீது இன்று கோர்ட் தீர்ப்பு

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,நவ.3 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான கனிமொழி எம்.பி. ஜாமீன் மனு மீது இன்று கோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உட்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கனிமொழி உட்பட 7 பேர் ஜாமீன் மனு மீது விசாரணை தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் ப்ரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் நிர்வாக இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேரின் ஜாமீன் மனுக்களை சி.பி.ஐ. எதிர்க்கவில்லை. ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, ஆ. ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா ஆகியோரை ஜாமீனில் விடுவதற்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்த 7 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு கூறப்படும் என்று கோர்ட் அறிவித்திருந்தது. அதன்படி இன்று கோர்ட் தீர்ப்பளிக்க உள்ளது. 

முன்னதாக, கனிமொழி உட்பட 5 பேரின் மனுக்களை எதிர்ப்பதில்லை என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று சி.பி.ஐ.யிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதை சுப்ரீம் கோர்ட் பதிவு செய்து கொண்டது. சி.பி.ஐ. விளக்கத்தில் 5 பேருக்கு எதிரான அம்சங்களோ, ஜாமீன் வழங்குவதை பாதிக்கும் எதிரான கருத்தோ இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. எனவே கனிமொழி இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்