முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார சரிவை மீட்க ஜி20 நாடுகள் உதவி செய்யும்

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,நவ.3 - உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை மீட்க ஜி20 நாடுகளின் தலைவர்கள் உதவி செய்வார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக அளவில் குறிப்பாக அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதர சரிவு, உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதே மாதிரி தற்போதும் அமெரிக்காவில் பொருளாதர சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவை கடுமையாக பாதிக்கவில்லை. இதற்கு காரணம் நாட்டின் கிராம அளவில் பொருளாதார வலு இருப்பதால்தான். அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார சரிவு ஏற்பட்டிருப்பதால் உலக அளவில் பொருளாதார சரிவை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு அம்சமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள கேனீஷ் நகரில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அடங்கிய ஜி20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு இன்று ஆரம்பமாகிறது. இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்துகொள்கிறார். இதனையொட்டி அவர் டெல்லியில் இருந்து பிரான்சுக்கு புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், பொருளாதார சரிவை மீட்டி, சரியான வளர்ச்சி பாதையில் செல்ல ஜி20 நாடுகள் தலைவர்கள் உதவி செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது இதை போக்க அந்த நாடுகள் கடும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். உலக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டி கொண்டுவர மாநாட்டில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும். பொருளாதார வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங் மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்