முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வ.தேசத்திற்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவு அணி வெற்றி

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மிர்பூர், நவ. 3 - வங்கதேச அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 229 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரை 1- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணி தரப்பில், எட்வர்ட்ஸ், பிராத் வெயிட், பொவெல், சாமுவேல்ஸ், டிவைன் பிராவோ மற்றும் சந்தர் பால் ஆகியோர் நன்கு பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்த னர். 

பெளலிங்கின் போது, எட்வர்ட்ஸ், பிஷூ மற்றும் சம்மி ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். அவர்களுக்கு பக்கபலமாக ரோச் மற்றும் சாமு வேல்ஸ் ஆகியோர் பந்து வீசினர். 

மே.இ.தீவு அணி கேப்டன் டேரன் சம்மி தலைமையில் வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து கேப்டன் முஸ்பிகர் ரகீம் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் 2-வது மற்றும் கடைசி போட்டி மிர் பூரில் உள்ள ஷெரே பங்க்ளா தேசிய அரங்கத்தில் 29 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவு அணி 126.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 355 ரன்னை எடுத்தது. எட்வர்ட்ஸ் 121 ரன்னையும், பொவெல் 72 ரன்னையும், பிராட் வெயிட் 50 ரன்னையும், சாமுவேல்ஸ் 48 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய வங்கதேச அணி 60 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 231 ரன்னில் சுருண்டது. அந்த அணி சார்பில் ஷாகிப் அல்ஹசன் 73 ரன்னையும், நயீம் இஸ்லாம் 45 ரன்னையும், நசீ ர் ஹொசைன் 42 ரன்னையும், இம்ருல் கெய்ஸ் 29 ரன்னையும் எடுத்தனர். 

அடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி 111.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 383 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளேர் செய்தது. டிவைன் பிராவோ 195 ரன்னையும், எட்வர்ட்ஸ் 86 ரன்னையும், சந்தர்பால் 59 ரன்னையும் எடுத்தனர். 

வங்கதேச அணி 2-வது இன்னிங்சில் 508 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை மே.இ.தீவு அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 80.2 ஓவரில் அனைத்து விக்கெட் டையும் இழந்து 278 ரன்னில் சுருண்டது. 

இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்த 2 - வது டெஸ்டில் 229 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டி கள் கொண்ட இந்தத் தொடரை 1 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி சாத னை படைத்தது. 

வங்கதேதச அணி தரப்பில், துவக்க வீரர் தமீம் இக்பால் 83 ரன்னையு ம், கேப்டன் முஸ்பிகர் ரகீம் 69 ரன்னையும், ஷாகிப் அல் ஹசன் 55 ரன் னையும், எடுத்தனர். தவிர, சக்ரியார் நபீஸ் 18 ரன்னையும், ரகிபுல் ஹச ன் 17 ரன்னையும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி சார்பில், பிஷூ 90 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். சம்மி 2 விக்கெட்டையும், எட்வர்ட்ஸ், ரோச் மற்றும் சாமு வேல்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக எட்வர்ட்சும், தொடர் நாயகனாக ஷாகிப் அல் ஹச னும் தேர்வு செய்யப்பட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்