முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிக் நாடுகள் கூட்டத்தில் மன்மோகன் சிங் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

கேனிஸ்,நவ.4 - ஜி20 நாடுகள் கூட்டத்தில் கையாள வேண்டிய யுக்தி குறித்து முடிவு செய்ய நடந்த பிரிக் நாடுகள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். பிரேசில்,ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளும் பொருளாதாரத்தில் விரைவாக முன்னேறி வரும் பெரிய நாடுகளாகும். இந்த 4 நாடுகள் கூட்டமைப்புக்கு பிரிக் என்று பெயர். பிரான்சில் உள்ள சுற்றுலா ஸ்தலமான கேனிஸ் நகரில் நேற்றுமாலையில் ஜி20 நாடுகள் கூட்டம் தொடங்கியது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில், அர்ஜெண்டைனா, ஜெர்மன், ஜப்பான் உள்பட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டன. இந்த கூட்டத்தில் கையாள வேண்டிய யுக்தி குறித்து முடிவு செய்ய முன்னதாக பிரிக் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் அதே கேனிஸ் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ரஷ்யா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். இருந்தபோதிலும் கூட்டத்தில் தீவிரமாக எந்த பிரச்சினையும் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில் கடந்த முறை புரூஸ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஜி20 நாடுகள் மாநாட்டில் ஐரோப்பா கண்டத்தில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளை இந்த மாநாட்டில் அங்கீகரிக்க வேண்டும் என்று கிரீஸ் கோரியுள்ளது. இதனால் ஜி20 நாடுகளுக்கு ஒரு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை தடுக்க ஜி20 மாநாட்டில் ஏதாவது முடிவ செய்தால் அதை இந்தியா எதிர்க்காது என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்