முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக மகளிர் தினம்: பாராளுமன்றத்தில் சபாநாயகர் வாழ்த்து

புதன்கிழமை, 9 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச்.- 9 - சர்வதேச மகளிர் தினமான நேற்று பாராளுமன்ற லோக்சபையில் சபாநாயகர் மீராகுமார் வாழ்த்துரை வாசித்தார். அப்போது பெண்களுக்கு அதிகளவில் அதிகாரங்கள் வழங்கப்படுவது பற்றி அவர் குறிப்பிட்டார்.  பெண்கள் மீது அமிலம் வீசுவதற்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வருவது பற்றி சபையில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், அமிலம் வீசுவதற்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரத் தேவையில்லை என்று குறிப்பிட்டார். ஏற்கனவே இதற்காக கடுமையான சட்டங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார். 

உலக மகளிர் தினத்தையொட்டி நேற்று உலகம் முழுவதும் பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நாளையொட்டி டெல்லியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சி.ஆர்.பி.எப் பெண்கள் பட்டாலியனை துவக்கி வைத்தார். பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பற்றி அவர் தனது உரையில் குறிப்பிட்டார். நேற்று 100 வது உலக மகளிர் தினமாகும். இதையொட்டி சென்னையிலும் ஒளவை பிராட்டியார் சிலைக்கு மாலையணிவித்து கவுரவிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்