முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் மற்றும் மனைகளுக்கான மதிப்பீடு டிசம்பரி வெளியீடு

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.4 -​தமிழ்நாடு முழுவதும் உள்ள நிலம் மற்றும் மனைகளுக்கான புதிய வழிகாட்டி மதிப்பீடு டிசம்பர் மாதம் வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கிராமம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அசையா சொத்துகளான நிலம் மற்றும் மனைகளின் வழிகாட்டி மதிப்பீட்டை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு நிர்ணயம் செய்யும். அவ்வாறு நிர்ணயம் செய்யும்போது நிலம் மற்றும் மனைகளின் சதுர அடி கணக்கிடப்படும். வெளிமார்க்கெட் விலையும், அரசு ஏற்கனவே நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பீடும் ஒப்பிட்டு பார்த்து புதிய வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயிக்கப்படும். இந்த மதிப்பீடு ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு தெருவுக்கும் மாறுபடும்.

தமிழ்நாட்டில் 2007​ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு மாவட்ட ரீதியாக நிலம் மற்றும் மனைகளின் வழிகாட்டி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக கடந்த மாதம் 14​ந் தேதி வெளியிடப்பட்டது. தாசில்தார் அலுவலகம், துணை பதிவாளர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த வரைவு வழிகாட்டி மதிப்பீட்டை பார்வையிட்டு, பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும், ஆட்சேபணைகளையும் தெரிவித்துள்ளனர்.

வரைவு வழிகாட்டி மதிப்பீட்டின்படி சென்னையில் அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு கிரவுண்டு நிலத்தின் விலை ரூ.6 கோடியே 72 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2007​ம் ஆண்டு வெளியிடப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின்படி இந்த சாலையில் ஒரு கிரவுண்டு நிலத்தின் விலை ரூ.4 கோடியே 72 லட்சமாக இருந்தது. இதன்படி பார்த்தால் கடந்த 4 ஆண்டுகளில் இந்த இடத்தின் மதிப்பு ரூ.2 கோடி வரை உயர்ந்துள்ளது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை குடியிருப்பு பகுதியில் ஒரு சதுர அடி நிலம் ரூ.28 ஆயிரம். முந்தைய வழிகாட்டி மதிப்பீட்டின்படி இங்கு ஒரு சதுர அடி நிலம் ரூ.19,675​க்கு விற்கப்பட்டது. போயஸ் கார்டன், மைலாப்nullர் குடியிருப்பு பகுதிகளிலும் ஒரு சதுர அடி நிலம் ரூ.28 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதுபோல அண்ணா சாலை, உஸ்மான் ரோடு, ஜி.என்.செட்டி ரோடு போன்ற பகுதிகளிலும் ஒரு சதுர அடி நிலம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் ஒரு சதுர அடி நிலம் ஆயிரம் ரூபாய் என்று வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்யப்படும். அதன்பிறகு மாநிலம் முழுவதும் உள்ள நிலம் மற்றும் மனைகளுக்கான வழிகாட்டி மதிப்பீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து புதிய வழிகாட்டி மதிப்பீடு பின்பற்றப்படும் என்று பத்திரப் பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்