முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பில் அதிக ஒத்துழைப்பு: இந்தியா - ஜப்பான் முடிவு

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.4 - இந்தியா-பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு மற்றும் ராணுவ கூட்டுப்பயிற்சியை அதிகரிக்க முடிவு செய்திருப்பதோடு கடல் பகுதியில் பாதுகாப்பு தொடர்பாக பரிமாற்றங்களையும் அதிகரிக்க நடவடிக்கையை இருநாடுகளும் அதிகரிக்க உள்ளன. வங்கக்கடலிலும் பசிபிக் கடலிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மேலும் கடலில் இந்தியா, ஜப்பான் கப்பல்கள் செல்லும்போது அவைகளில் கொள்ளையடிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்திய குழுவினர் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைமையிலும் ஜப்பான் குழுவினர் அந்த நாட்டு ராணுவ அமைச்சர் யாசுவோ இச்சிகவா தலைமையிலும் நேற்றுமுன்தினம் இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடல் பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு, கடல் கொள்ளை தடுப்பு நடவடிக்கைகள், இருநாட்டு கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெறுதல், கடல் வழிப்பயணத்தின்போது தகவல் தொடர்பை அதிகரித்தல், அதை விரைவில் பரிமாற்றம் செய்து கொள்வது, கடல் பகுதியில் தடையில்லா வர்த்தகத்தை நடத்துவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருதரப்பினரும் விரைவான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினர் என்று ராணுவ செயதி தொடர்பாளர் சிதான்சு கர் நேற்று டோக்கியோவில் தெரிவித்தார். கடல் போக்குவரத்து தொடர்பாக இருநாடுகளும் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தவும் பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்பட்டது. இந்திய குழுவில் பாதுகாப்பு செயலாளர் சஷி காந்த் சர்மா, ஜப்பானுக்கான இந்திய தூதர் அலோகி பிரசாத், இந்திய கடற்படை ஊழியர்கள் துணை தலைமை தளபதி அட்மிரல் ஆர்.கே.தோவான், லெப்டினெட் ஜெனரல் வி.கே.அலுவாலியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கூட்டத்தின்போது இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி பேசுகையில், கடல்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு ஒரு சவாலாக அதிகரித்து வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து கிழக்கு அரபு கடல் பகுதியில் சோமாலியா நாட்டு கடல் கொள்ளையர்களுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்து உள்ளது. இருந்தபோதிலும் அந்த பகுதியில் மட்டுமல்லாது கடல் பகுதியில் கொள்ளையை தடுத்து நிறுத்த சர்வதேச சமுதாய ஒத்துழைப்பு அவசியம் தேவையாக இருக்கிறது என்றார். கடல் கொள்ளையர்களை தண்டிக்க சரியான சட்டவிதிமுறைகளை கொண்டுவருவதோடு கடல் கொள்ளைகள் மூலமாக பணம் பறிக்கப்பட்டு அவை,தீவிரவாதத்திற்கு செல்வதை தடுக்கவும் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அந்தோணி கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்