முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தல் வாக்காளர்கள் புகார் செய்ய கால்சென்டர்கள் அமைக்க முடிவு-குரேஷி

புதன்கிழமை, 9 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.- 9 - வாக்காளர்கள் புகார் செய்ய தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் முதல் முறையாக கால் சென்டர்களை அமைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை,கேரளம், மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும் கள்ள ஓட்டு போடாமல் இருக்கவும் நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்னும் தொடங்கவில்லை அதற்குள் துணை ராணுவத்தினர்களை பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு அனுப்பி வருகிறது. 

மேலும் தொகுதிகளில் ஏதாவது முறைகேடு ஏற்பட்டால் உடனடியாக தேர்தல் அலுவலகத்திற்கு தகவல் கொடுக்க கால் சென்டர்களை அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் குரேஷி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்த மாதிரி கால் சென்டர்கள் அமைக்கப்படுவது முதல் முறையாகும் என்றும் குரேஷி தெரிவித்தார். ஏதாவது புகார் கொடுக்க வேண்டுமென்றாலோ அல்லது கேள்விகள் கேட்ட விரும்பினாலோ கால் சென்டர்களுக்கு வாக்காளர்கள் சென்று 1965 என்ற நம்பருக்கு போன் செய்யலாம். இந்த கால் சென்டர்களுக்கு தேர்தல் நடக்கும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் துணை கமிஷனர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அறையுடன் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் கால் சென்டர் மூலம் செய்யப்படும் புகார் அல்லது கேட்கப்படும் கேள்விகள் அங்கிருந்து நேரடியாக கட்டுப்பாடு அறைக்கு செல்லும். இதற்காக 10 டெலிபோன்கள் வைக்கப்பட்டிருக்கும். இவைகளை இளைஞர்களும் இளம் பெண்களும் இயக்குவார்கள் என்றும் குரேஷி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்