முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஹாரா பாலைவனத்தில் கடாபியின் மகன் பதுங்கலா?

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், நவ. 5 - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சஹாரா பாலைவனத்தில் ஒளிந்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. கடாபியின் மகன்களில் ஒருவர் சீப் அல் இஸ்லாம் கடாபி. லிபியாவில் உள்நாட்டு போர் நடந்த போது சில முக்கிய ராணுவ தலைவர்களுடன் லிபிய எல்லையில் இருந்து அவர் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. டுயொக் பழங்குடியின மக்கள் அவரை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். இந்த இன மக்கள் வட ஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனத்தில் வாழ்கின்றனர். 

தப்பியோடியுள்ள கடாபியின் மகனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தேடி வருகிறது. உள்நாட்டு போரின் போது சில ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களை கொன்று குவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் ஆப்பிரிக்காவில் சில நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பரந்து விரிந்த பாலைவனப் பகுதியில் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியாது என்று மூத்த பத்திரிக்கையாளர் தியாம் தெரிவித்துள்ளார். எனினும் மாலி நாட்டு பாலைவனப் பகுதிகளில் சில இடங்களில் நீரும், விலங்குகளும் உள்ளன. ஆனால் அப்பகுதி அல்கொய்தா பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லிபிய நாட்டில் இஸ்லாமிய இயக்கங்களை அடக்கி ஒடுக்கிய காடபி குடும்பத்தாரை அவர்களுக்கு பிடிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்