முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்ட வீரர்களுக்கு சிறை தண்டனை நல்ல பாடம்: அப்ரிடி

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கராச்சி, நவ. 5 - கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு சிறை தண்டனை வழ ங்கியிருப்பது எதிர்கால சந்ததிக்கு நல்ல பாடம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சாகித் அப்ரிடி தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு -  சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான்பட்டிற்கு 10 மாதமும், ஆசிப்புக்கு 12 மாதமும், ஆமிருக்கு 6 மாதமும் சிறை தண்டனை விதித்து லண்டன் கோர்ட் நேற்று தீர்ப்பு கூறியது. 

இதனைத் தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சூதாட்டப் புகாரில் சிக்கிய வீரர்களுக்கு சிறை தண்டனை முதன் முறையா க வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் வாட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தண்டனை குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் பரவலாக பேசி வருகின்றனர். 

இந்தப் பிரச்சினை குறித்து கராச்சியில் நிருபர்களைச் சந்தித்த பாகிஸ் தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சாகித் அப்ரிடியிட ம் நிருபர்கள் கேட்ட போது, அவர் கூறியதாவது - 

சூதாட்ட விவகாரத்தால் பாகிஸ்தான் மட்டும் பாதிக்கப்படவில்லை. இந்த பிரசச்சினையால் எல்லா நாடுகளுக்கும் பாதிப்பு தான். சூதாட்டம் பாகிஸ்தானில் மட்டும் நடைபெறவில்லை. பிற நாடுகளி லும் நடக்கிறது. 

தண்டனை பெற்ற வீரர்களால் நாட்டிற்கு பெரிய அவமானம் ஏற்பட்டு விட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒட்டு மொத்த புகழை யும் இந்த 3 வீரர்கள் கெடுத்து விட்டனர். 

சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு சிறை தண்டனை வழங்கி இருப் பது எதிர்கால சந்ததிக்கு நல்ல பாடமாகும். இனிமேல் வீரர்கள் இந்த தவறை செய்ய பயப்படுவார்கள். சூதாட்ட தரகர்கள் எந்த ரூபத்திலும் வருவார்கள். 

நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். தவிர, தண்டனை பெற்ற 3 பாகிஸ்தான் வீரர்களுக்கும் தயவு தாட்சன்யம் காட்டக் கூடாது . இவ் வாறு முன்னாள் கேப்டன் அப்ரிடி தெரிவித்தார். 

பாகிஸ்தான் அணியின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக இருந்த அப்ரிடி, பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் மற்றும் தேர்வுக் குழு தலைவர் எஜாஸ் பட் ஆகியோருடன் எழுந்த மோதல் காரணமாக கேப்டன் பத வியில் இருந்து திடீர் ஓய்வு பெற்றார். 

தற்போது பட் பதவி காலம் முடிவடைவதால் மீண்டும் ஒரு நாள் போட்டியில் விளையாட முடிவு செய்து உள்ளார். வக்கார் யூனிஸ் சொந்த பிரச்சினை காரணமாக பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்