முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் மீதான விலை: தப்பித்கொள்ளும் பிரணாப்

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.5 -  பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாடு மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தப்பித்துக்கொள்ளும் வகையில் கூறியுள்ளார். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்பு 10-க்கும் மேற்பட்ட தடவைகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி உள்ளது. சமையல் எரிவாயு, கெரசின் ஆகியவைகளின் விலையையும் பல முறை உயர்த்தியது. இனியும் உயர்த்த வேண்டிய கட்டாய சூழ்நிலை மத்திய அரசுக்கு வந்தது. இதனால் கெட்ட பெயர் அதிகம் ஏற்பட்டுவிடும் என்று கருதிய மத்திய அரசு, பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தும் பொறுப்பை எண்ணெய் கம்பெனிகளிடம் கொடுத்துவிட்டது நழுவிக்கொண்டது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது என்று கூறி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.82 பைசாவீதம் எண்ணெய் கம்பெனிகள் உயர்த்தியுள்ளன. மேலும் டீசல், சமையல் எரிவாயு, கெரசின் விலையும் உயரும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரணாப், தப்பித்துக்கொள்ளும் வகையில் பெட்ரோல் விலை கட்டுப்பாடு அதிகாரம் மத்திய அரசிடம் இல்லை. இதற்கான பொறுப்பு எண்ணெய் கம்பெனிகளிடம்தான் உள்ளன என்றார். பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் பணவீக்கத்தின் விளைவுதான். பணவீக்கமானது தற்போது 10 சதவீதத்தை நெருங்கும் அளவில் உள்ளது. பெட்ரோலானது விலை கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பொருள். அதேசமயத்தில் டீசல், சமையல் எரிவாயு, கெரசின் விலை கட்டுப்பாடுள்ள பொருள்களாகும் என்றும் பிரணாப் முகர்ஜி மேலும் கூறினார். கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதற்கு காரணம் எண்ணெய் கம்பெனிகளுக்கு இறக்குமதி செலவு மட்டுமல்லாது கச்சா எண்ணெய்க்கு கூடுதல் தொகை கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago